நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்

Advertisement

Mahila Samman Saving Certificate in Tamil

இன்றைய காலத்தில் இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கின்ற எந்த பக்கம் போகிறது என்று தெரியாது. நீங்கள் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணமே இருக்க மாட்டிக்கிறது என்று கவலைப்படுவார்கள். இதற்கு நீங்கள் தினமும் பணத்தை எடுத்து சேமித்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் முடியாது. அதனால் மாதம் மாதம் செலுத்த கூடிய திட்டத்தில் சேர்ந்து சேமியுங்கள். எந்த திட்டத்தில் சேர்வது என்ற சந்தேகம் வருகிறதா.! தபால் துறையில் பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இன்றைய பதிவில் பெண்களுக்கான அறிவிக்கப்பட்ட திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

Mahila Samman Saving Certificate:

பிப்ரவரி 1 நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் ஒன்று தான் பெண்களுக்கென்று மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 2023 பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கொடுத்த ஒரு ஹாப்பி நியூஸ் 

திட்டம்:

இந்த மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் முழுமையாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் சேமித்து பயன்பெற முடியும்.

முதலீடு:

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை பல்க் அமோன்ட்டை டெபாசிட் செய்து கொள்ளலாம். ஒரு முறை செலுத்தினால் போதுமானது. முதிர்வு ஆண்டுக்கு இடையில் பணம் செலுத்த தேவையில்லை. அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

வட்டி:

இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது.

முதிர்வு ஆண்டு:

இந்த திட்டத்தில் கால அளவு 2 ஆண்டுகள்.

இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு பாதி சேமிப்பை எடுத்து கொள்ளும் வசதியும் உள்ளது.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் ஏப்ரல், 2023 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement