மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா..?

Advertisement

Mahila Samman Savings Scheme

நண்பர்களே நம் அனைவருக்குமே பணத்தேவை என்பது கட்டாயம் இருக்கும். அப்படி பணத்தேவை ஏற்படும் போது நாம் மற்றவர்களிடம் சென்று கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் சம்பாதிக்கும் போதே பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பிற்காலத்தில் நாம் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும் போது அந்த பணம் நமக்கு உதவியாக இருக்கும்.

அதனால் தான் இன்றைய நிலையில் பலரும் போஸ்ட் ஆபிஸ், LIC போன்ற நிறுவனங்களில் சேமிப்பு திட்டத்தை தொடங்கி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் நல்ல செய்தி என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மகளிருக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ்..! 

போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டமும் ஓன்று. இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு முறை சிறுசேமிப்புத் திட்டமாகும். 

தற்போது இந்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் ஒரு புதிய அறிவிப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களில் மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளரே இன்னுமா நீங்க இந்த குட் நியூஸை தெரிஞ்சிக்கல

அதாவது, நாடு முழுவதும் உள்ள 1.59 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் 2023 திட்டத்திற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் ஏப்ரல் 1, 2023 முதல் அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மூலம் முதலீடு செய்ய முடியும்.  

அதுமட்டுமில்லாமல் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரையிலான 24 மாத காலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி

மேலும் இந்த போஸ்ட் ஆபிஸின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் பெண் குழந்தைகள் அல்லது பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

வங்கி நிலையான வைப்புத்தொகை (FDகள்) மற்றும் பிற சிறு சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்தத் திட்டம் 7.5% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை 24 மாத ஒப்பந்தம் வழங்கப்படும்.

என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா 

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement