மக்கள் ID
வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலத்தில் ஆதார் அட்டை இல்லாத நபரே இருக்க முடியாது. வீட்டில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தனித்தனியாக ஆதார் அட்டை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. பல்பொருள் அங்காடி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், வங்கி மற்றும் வேலை புரியம் அலுவலகம் எங்கு சென்றாலும் முதலில் கேட்பது ஆதார் அட்டையை தான். அந்த அளவிற்கு ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இப்போது ஆதார் அட்டையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மக்கள் ID எண் என்ற ஒரு புதிய திட்டம் அரசின் உத்தரவின்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வகையில் இந்த மக்கள் ID-ன் அம்சங்கள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
Makkal ID News in Tamil:
ஆதார் அட்டையின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அதனுடைய முக்கியத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நீங்கள் சாதரணமாக வங்கிற்கு பணம் எடுக்கவோ அல்லது பணம் போடுவோ சென்றால் அங்கு வங்கி புத்தகத்தை விட ஆதார் அட்டையை தான் முதலில் கேட்கின்றனர்.
இப்போது ஆதார் அட்டைக்கு அடுத்த நிலையில் மக்கள் ID எண் என்ற ஒரு புதிய திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மக்கள் ID அடையாள எண்ணானது 10 முதல் 12 வரை இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணாக வர இருக்கிறது.
இத்தகைய மக்கள் ID அறிவிப்பானது மக்கள் அனைத்து வகையான சமூக நலன்களையும் பெற வேண்டும் நோக்கதோடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் ID எண் பயன்பாட்டிற்கு வருவதற்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் ID எடுப்பதற்கான பணிகள் விரைவில் தொங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ 2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |