Meta for Ads Plan Free 2023 in Tamil
நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸப் மட்டுமே. ஏனென்றால் வாட்ஸப் என்பது மிகவும் எளிமையான மற்றும் எண்ணற்ற தகவலை எளிதில் மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஒன்றாக இருப்பதனால் யூசர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் யூசர்களின் மெண்டாலிட்டிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனமும் புது புது அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதேபோல் வாட்ஸப்பிற்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமையும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் முக்கியமானது என்றால் இவை இரண்டினையும் பயன்படுத்து நாம் இதுநாள் வரையிலும் கட்டணம் என்ற ஒன்றை செலுத்த வேண்டும். இதுநாள் வரையிலும் இவ்வாறு இருந்த பட்சத்தில் தற்போது மெட்டா நிறுவனம் ஒரு புதிய முடிவியினை செயல்படுத்த ஆலோசனை செய்து ஆகவே அது என்ன நியூஸ் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மெட்டாவின் புதிய விதிமுறை:
நாம் பயன்படுத்த வாட்ஸப் முதல் இன்ஸ்டாகிராம் என அனைத்தினையும் உபயோகப்படுத்த ஒரு ஆண்ட்ராய்டு மொபைல், இமெயில் ஐடி மற்றும் அதற்கான ஒரு பாஸ்வெர்டு என இவற்றை மட்டும் இருந்தால் போதும் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை ஆனது இருந்தது.
ஆனால் தற்போது மெட்டா நிறுவனம் ஆனது வருகின்ற 2024-ஆம் ஆண்டில் ஒரு புதிய யுக்திகளை கையாள போவதாகவும், அவற்றின் மூலம் யூசர்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்மை கிடைக்க இருப்பதாகவும் மெட்டா நிறுவனத்தின் CEO ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதாவது எண்ணற்ற நிறுவனங்கள் தன்னை தானே அறிமுகம் செய்து கொள்ள வாட்ஸப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுப் என இவற்றில் விளம்பரங்கள் மூலமாக தான் அறிமுகம் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் புதிதாக சந்தா பிளான் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறது. அதாவது வாட்ஸப் மற்றும் இன்ஸ்ட்ராகிராமில் விளம்பரங்களை விரும்பாத நபர்கள் சந்தா பிளானை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் விளம்பரங்களை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏனென்றால் பயனரின் அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுதல் அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். ஆகவே இத்தகைய காரணத்தினால் தான் சந்தா பிளான் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே இலவச சந்தா மாதத்திற்கு 14 டொலர்கள் எனவும், இன்ஸ்டாகிராம் பேஸ்புக் விளம்பர இலவசத்தின் டெஸ்க்டாப் பதிப்பு 17 டாலர்களாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அம்சம் இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு தொடக்கம் அல்லது இறுதிக்குள் கொண்டுவரப்படலாம் என்றும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |