மெட்ரோவில் பயணம் செய்தால் பரிசு என்ன
நம் நாட்டில் மக்கள் தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டேஇருக்கிறது. அதிலும் சென்னை போன்ற பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இத்தகைய கூட நெரிசலை தவிர்க்க தான் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ சேவை மூலமாக ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்ன சலுகை என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
வழித்தடம்:
தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போதுவரை 24 கோடி மக்கள் பயணம் செய்து வந்துள்ளார்கள்.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
யாருக்கு பரிசு:
சென்னை மெட்ரோ ரயிலில் சிங்கார அட்டையை பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். , 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கப்படும்.
பரிசு பொருட்கள் தேர்ந்தெடுக்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படும். பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் தான் பரிசு பொருள் வழங்கப்படுகிறது.
3 மாதம்:
◊ முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை
◊ இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை
◊ மூன்றாவது மாதம் 15.02.2023 முதல் 15.03.2024 வரை
2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |