வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

Updated On: May 30, 2023 7:26 AM
Follow Us:
Mettur Dam Water Opening Date
---Advertisement---
Advertisement

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார்.

மேட்டூர் அணை திறப்பு 2023 – Mettur Dam Water Opening Date:

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே கூட இயக்கப்படும். சில நேரங்களில் காலதாமதாகவும் திறக்கப்படும்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வந்ததால் வழக்கம் போல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2023

அதற்கு ஏற்றபடி குறுவை சாகுபடிக்கும் விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now