இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் கிடைக்குமா..?

Advertisement

Minister Chakrapani Letter to Central Govt in Tamil

ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள். அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் சரியாக மக்களுக்கு செல்லவில்லை. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கோதுமை, மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Minister Chakrapani Letter to Central Govt in Tamil:

ஒவ்வொரு அனைத்து ரேஷன் அட்டைக்கும் ஒவ்வொரு வகையான முறையால் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதற்குக்கிடையில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது. அதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால்,

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கப்படும் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அளவை குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அதிகமாக 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுகிறது.

இது குறித்து  அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல கோதுமையை நேரடியாக நாமே கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இதுபோல் அனுமதி கிடைத்தால் நம்முடைய தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

2021 திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் சுமார் 7500 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை இப்போது 2,712 கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது.  இதனால் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 30 லட்சம் நபர்களுக்கு எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கபடவேண்டும்.

இதனை 7000 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை 2,012 லிட்டராக குறைத்துள்ளனர். இப்போது நமக்கு 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் கிடையாது. பின்ன யாருக்கு 1000 ரூபாய் கிடைக்கும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement