ஆயங்குளம் அதிசய கிணறு நிரம்பாதது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்!

miracle well in tamil nadu

நெல்லையில் அதிசய கிணறு – Miracle Well in Tamil Nadu

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயங்குளத்தில் அதிசய கிணறு. அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொழிந்த கன மழையின் போந்து ஏற்பட்ட வெள்ளபெருகில் நாள்தோறும் 50 கன அடி நீர்வித்தம் ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் சென்றும் கிணறு ஒன்று நிரம்பாமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அந்த கிணற்றில் போடப்பட்ட பொருட்கள் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் மிதந்ததும் ஆசிரியத்தை ஏற்படுத்தியள்ளது. அது குறித்த செய்தியை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க..

ஆயங்குளம் அதிசய கிணறு நிரம்பாதது ஏன்?

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயங்குளத்தில் உள்ள கிணற்றில் எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத காரணத்தினால் ஆய்வு செய்யப்பட்டது.

ஐ​ஐடி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக ஐஐடி பேராசிரியர்கள் குழு, அதிசய கிணற்றையும், கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகளையும் ஆய்வு செய்தனர்.

நவீன தொழில்நுட்ப உதவியுடன், கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், அந்த கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகளினால் ஆன குகைகள் இருப்பது கண்டய்யப்பட்டது. இந்த சுண்ணாம்பு பாறைகள் வழியாக நிறைய ஓடைகள் செல்வத்தினால் கிணறு நிரம்பவில்லை என்று ஐ​ஐடி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மழைநீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்கி அது நாளடைவில் பெரிய குகைகளாக மாறியுள்ளது என்பது ஆய்வின் போது தெரியவந்துள்ளது. அதேபோல் சில குகைகளில் கால்வாய் போன்ற அமைப்புகளும் உருவாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com