வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை..! மோக்கா புயல் எச்சரிக்கை..!

mokka cyclone in tamil

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

பொதுவாக வருடா வருடம் காலநிலை மாற்றங்கள் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கும். அதன் படி பார்க்கும் போது ஒவ்வொரு வருடமும் அந்தந்த காலநிலைக்கு ஏற்றவாறு தான் வெயில், மழை மற்றும் குளிர் காலமானது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. எப்போதும் கோடை காலம் என்றால் வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாக இருக்கும். மேலும் அக்னி நட்சத்திரம் கோடை காலத்தில் ஆரம்ப ஆகுவதால் வெயில் மண்டைய பிளக்கும் அளவிற்கு வருடா வருடமும் இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆனது அறிவித்துள்ளது. ஆகையால் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் பெயர் என்ன மற்றும் அந்த புயல் எப்போது, எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடக்கும் என்ற அனைத்து செய்தியினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மோக்கா சூறாவளி:

புதிதாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது இன்று அதிகாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மோக்கா புயல் என்றும் வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது.

இந்த மோக்கா சூறாவளி ஆனது வட மேற்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பின்பு தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் தீவிரபுயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோக்கா புயல் ஆனது மியான்மர்கு தென்-தென்மேற்கில் 1120 கி.மீ தொலைவிலும், வங்காளதேசம் தென்-தென்மேற்கே 1,210 கி.மீ தொலைவிலும் மற்றும் போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 510 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மே 12-ஆம் தேதி அன்று வடக்கு-வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அன்றே மத்திய வங்கக்கடலை அடையும் என்றும், அதன் பிறகு மே 13-ஆம் தேதி அன்று மாலை அதன் உச்சத்தை தொட்டுவிடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் பிறகு மோக்கா புயல் வலுவிழந்து சுமார் 120-130 கிமீ இடையே 145 கி.மீ. வேகத்தில் மே 14-ஆம் தேதி என்று வடக்கு மியான்மர் கடற்கரை, கியாக்பியு மற்றும் தென்கிழக்கு வங்காளதேசம் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த மோக்கா புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் சென்னையில் இடியுடன் கூடிய மழை ஆனது 5 நாட்களுக்கு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News👇👇 ரயிலில் நாய்களுக்கும் முன்பதிவு செய்யலாம்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil