மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை இனி அரசு பள்ளி மாணர்வகளுக்கும் கிடைக்கபோகுதாம்..! தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்..!

Advertisement

மாணவர்களுக்கு 1000 ரூபாய்

தமிழக அரசானது ரேஷன் கார்டு பயனாளருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை ஆரம்ப காலத்தில் அறிவித்துள்ளது. அதன் பிறகு இத்தகைய அறிவிப்பினை தொடர்ந்து அந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பினையும் அறிவித்துள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு மூலம் 1000 ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் அடங்கும் என்றும் மற்றொரு அறிவிப்பினையும் கூறியுள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பு என்ன எந்தந்த வகுப்பு மாணவர்கள் எல்லாம் பயன்பெற முடியும் என்ற முழு தகவலையும் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ தமிழக அரசு அறிவித்த இந்த குட் நியூஸை தெரிஞ்சுக்கலனா எப்படி.. 

திறனறி தேர்வு திட்டம்:

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாணவர்களின் திறனரி தேர்வு திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அது என்னவென்றால் தமிழ்நாட்டில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு வைக்கப்படும். அதிலும் குறிப்பாக இந்த தேர்வானது 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப்பட்டு அதில் 500 மாணவிகள் மற்றும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

 அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக 1000 ரூபாய் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரை கிடைக்கும் என்றும் அதன் பிறகு மாணவர்கள் இளங்களை மற்றும் முதுகலை படிப்பினை படிக்கும் போது 1 வருடத்திற்கு 12,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து மற்றொரு செய்தினையும் கூறியுள்ளார். அது என்னவென்றால் சென்னையில் உள்ள IIT மூலமாக 250 மேல்நிலை பள்ளியினை சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு IITM திட்டத்தின் முலமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் இத்தகைய கற்றல் திறன் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் என்றும் கூறி அதற்கான நடைமுறையினையும் ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு அரசு பள்ளி மாணர்வர்களுக்கு IITM திட்டத்தினை அளிப்பதன் வாயிலாக அவர்களுடைய திறன் மேம்படும் என்றும் நிறைய விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement