வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மின் மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் பெறும் திட்டம்..! எப்படி பெறலாம்..!

Updated On: January 12, 2023 1:33 PM
Follow Us:
Motor Pump Subsidy in Tamil
---Advertisement---
Advertisement

Motor Pump Subsidy in Tamil

விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமைச்சர் எம்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றது அதன் தொடர்ச்சியாக தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டு வாங்க மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த சில தகவல்கள் மற்றும் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

2022-23-ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை:Motor Pump Subsidy

2022-23-ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் மானியம் வழங்கப்படும்:

பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணறுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும்:

இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

தகுதி:

ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த திட்டத்தில் மானியம் பெற விரும்புபவர்கள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது <https://mis.aed.tn.gov.in> என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் ஆவணங்கள்:

ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்கியதற்கான விலைப்பட்டியல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now