தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Advertisement

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு வருவாய் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

புதிதாக 8 மாவட்டங்கள்:

சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணியை தனியாக பிரித்து ஆரணியை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும், என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சிக்கு வருகிறது மெட்ரோ ரயில்… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

அதே போல் திமுக கொறடா கோவி.செழியன் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளார். 

இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு தேவையான நிதிநிலைமை போன்றவற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் இருக்கிறது. இந்நிலையில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை உயர்வு..! அடுத்து அடுத்து மக்களுக்கு நற்செய்தி..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement