மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசு நிறைய புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. அத்தகைய திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நன்மையினை அளிக்குமா என்று கேட்டால்..? இதற்கான பதில் சரியாக தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அனைத்து திட்டங்களும் நன்மையினை அளிப்பது இல்லை. சில திட்டங்கள் நன்மையினையும் சில திட்டங்கள் மக்களுக்கு அதிர்ச்சியினையும் தர இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஒரு புதிய செய்தி ஒன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகவே அது என்ன அறிவிப்பு என்று அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ தமிழக அரசு அறிவித்த இந்த குட் நியூஸை தெரிஞ்சுக்கலனா எப்படி..
நிலக்கரி சுரங்கம் ஏலம்:
அதாவது 6-வது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தில் மொத்தம் 29 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. அத்தகைய நிறுவங்களுடன் மத்திய அரசானது ஒப்பந்தம் இட்டு உள்ளது.
இவ்வாறு இருக்கையில் கடந்த மாதம் மார்ச் 29-ஆம் தேதி அன்று நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான 7-வது சுற்று ஏலம் நடைபெற்றுருக்கிறது. அதில் மொத்தம் 106 நிலக்கரி சுரங்கம் 11 மாநிலங்கள் அமைக்க ஏலம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்க ஒன்று.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அத்தகைய மாவட்டங்களில் தான் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம்:
கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணபுரம், சின்னநத்தம், அம்பாபுரம், நத்தமேடு உள்ளிட்ட 20 கிராமங்களில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம்:
அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவிப்பினை அறிவித்துள்ளது.
மத்திய அறிவித்துள்ள இத்தகைய அறிப்பானது விவசாயிகளிடம் வருத்தத்தையும் பெரும் எதிரிப்பினையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் இதற்கான பணிகள் குறித்தும் இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இதையும் படியுங்கள்⇒ மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |