ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்க நகை வாங்கும்போது இதை கவனிங்க… மத்திய அரசு புதிய அறிவிப்பு!

Advertisement

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்க நகை வாங்கும்போது இதை கவனிங்க… மத்திய அரசு புதிய அறிவிப்பு! New Hallmark With 6 Digit Code Must for Gold Jewellery, Artefacts From April 1

நாம் சிறுக சிறுக சேமித்து வாங்கும் தங்க நகைகளின் தரம் மற்றும் நன்பக தன்மையை தங்கம் வாங்குவதற்கு முன் கண்டிப்பாக அதனை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தங்கம் வாங்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்க வாங்கும்போது இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

New Hallmark With 6 Digit Code:

ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து தங்க நகை அல்லது தங்கத்தால் ஆன ஏதாவது ஒரு பொருளை வாங்கும்போது அவர்கள் இன்னும் சில முக்கியமான விஷங்களை கவனிக்க வேண்டும். New Hallmark With 6 Digit Code

அதாவது மத்திய அரசு இதற்ககா ஒரு புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளனர், அதாவது தங்க நகை வாங்கும் பொது அதில் 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இருக்கிறதா என்பதை நீங்கள் செக் செய்துகொள்ள வேண்டும்.

ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு நகைக்கடை உரிமையாளர்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.

இந்த ஒரு விதிமுறையை பொறுத்தவரைக்கும் 2019-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு அறிவித்திருந்தனர், அதாவது 2021-ஆம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்படப்போற தங்க நகைகள் அல்லது தங்கத்தால் ஆன பொருட்களுக்கு 6 டிஜிட் ஹால்மார் எண் என்பது மிகவும் அவசியம், அப்படி இல்லை என்றால் 2021-ஆம் வருடத்திற்கு பிறகு அது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்று சொல்லியிருந்தது.

அதன் பிறகு கொரோன காலக்கெடு போன்ற சூழ்நிலையினால் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்ட்டது. இந்த விதிமுறையை மறுபடியும் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த போவதாக மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் சொல்லிருக்காங்க.

14, 18, 22 கேரட் கொண்ட தங்க நகைகளுக்கு  இந்த 6 டிஜிட் ஹால்மார்க் எண் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன்பு BIS ஹால்மார் முத்திரை இருக்கிறதா என்பதை நாம் செக் செய்திருப்போம், இனி வருகின்ற காலகட்டத்தில் இந்த 6 டிஜிட் கொண்ட ஹால்மார் எண் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த விதிமுறை பெறிய நகை கடையாக இருந்தாலும் சரி, சிறிய நகை கடையாக இருந்தாலும் எல்ல நகை கடைகளிலும் தங்க நகை என்பது சுத்தமான நகையை இருக்க வேண்டும். ஒரு நல்ல தரமான தங்க நகையை விற்பனை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்க்காகத்தான் மத்திய அரசு இந்த விதிமுறையை கையில் எடுத்துள்ளனர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரேஷன் கார்டை இனி வீட்டிலேயே வாங்கிக்கொள்ளலாம்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement