வருமான வரி செலுத்துதல்
இப்போது உள்ள பரபரப்பான செய்தி என்றால் அது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பு. இத்தகைய இணைப்பினை வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்தல் நடைபெற்றது. அதில் நிறைய மாற்றங்கள் மற்றும் சலுகைகள் மக்களுக்கு ஏற்றவாறு நடைமுறைக்கு வர உள்ளது. அதில் ஒரு நற்செய்தி என்றால் மக்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் முதல் 1000 ரூபாய் கிடைக்க போகிறது என்ற செய்தி வந்து இருக்கும். இதனை தொடர்ந்து மற்றொன்றும் வந்துள்ளது. அது என்னவென்றால் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் வருமான வரி செலுத்துவதில் சில மாற்றங்கள் உள்ளது என்று அறிவிப்பு வந்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு அதில் என்ன மாற்றம் வந்துள்ளது போன்ற அனைத்தினையும் இன்றைய News பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா.. அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்..
மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி சலுகைகள்:
இப்போது இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை நடந்து முடிந்துள்ளது. இத்தகைய பட்ஜெட் தாக்கல் முறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பினை வருமான வரி செலுத்தும் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்பது மிகவும் அவசியமானதாகும்.
இந்த வருடத்திற்கான கணக்கு முடிவடைய இன்னும் சில நாட்கள் இருப்பதால் அது முடிவடைந்த பிறகு ஏப்ரல் மாதம் முதல் புதிய கணக்கு ஆரம்பம் ஆக உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வருமான வரியினை தவறாமல் செலுத்தி வருகின்றோம்.
அதனால் இந்த வருடம் புதிய கணக்கு ஆரம்பம் ஆகும் போது வருமான வரியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால் ஆண்டு வருமானம் 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருந்தால் 15% வரியும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருந்தால் 20% வரியும் மற்றும் 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை இருந்தால் 10% வரியும், 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருந்தால் 5% வரியும் மற்றும் 15 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30% வரியும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் இத்தகைய வருமான வரி மாற்றம் இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகாயல் இதனை வருமான வரி செலுத்துபவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ தமிழக மக்களே வீடு, நிலம் வாங்க போறீங்களா.. அப்போ உங்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது அது என்ன தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |