புதிய வருமான வரி முறை
பொதுவாக நாம் எந்த வேலைக்கு செல்கிறோம் மற்றும் அதில் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றோம் என்பது எப்படி முக்கியமான ஒன்றாக உள்ளதோ அதனை போலவே நாம் சரியாக வருமானம் வரி செலுத்துவது என்பதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அது போலவே மக்கள் அனைவரும் அவருக்கான வரியினை இதுநாள் வரையிலும் சரியாக செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான பட்ஜெட்டின் போது நிறைய புது புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இப்போது மாதம் சம்பளம் பெறுவோருக்கு புதிய வருமானம் வரி மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் இந்த வரி மாற்றமானது பழைய வருமான வரி போல இல்லாமல் சில வேறுபாடுகளுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் அத்தகைய நற்செய்தியினை பற்றி தகவலை இன்றைய பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாற போகுதாம் மத்திய அரசு அறிவிப்பு தெரியலன்னா உடனே தெரிஞ்சுக்கோங்க
புதிய வரி முறை வருமான வரி அடுக்குகள்:
மாத சம்பளம் பெறுவோர் மற்றும் சொந்தமாக தொழில் புரிபவர் என அனைவருக்கு வருமான வரி என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதனை சரியான நேரத்தில் சரியான காலக்கெடுவில் செலுத்தவில்லை என்றால் சில நேரத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் செலுத்தும் வருமான வரி தொகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது என்னவென்றால்..
அதாவது பழைய வருமான வரி முறையில் 7 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி இல்லை என்றும் 7 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் வருமான வரி ஒவ்வொருவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால் புதிய வருமான வரி மாற்றத்தின் படி 7,27,700 ரூபாய் வரை வருமானம் இருந்தால் வரை செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் வருமான வரி செலுத்தும் போது புதிய மற்றும் பழைய வருமான வரி என்று Option முறையில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை இருக்கும். ஆனால் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அதுமாதிரி Option முறை இல்லாமல் நிலையான ஒன்று தான் இருக்கும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புதிய அறிவிக்கையில் கூறியுள்ளார்.
வருமான வரி அடுக்குகள்:
60 முதல் 80 வயதிற்கு உட்பட மூத்த குடிமக்களுக்கான வரி அடுக்கு | 80 வயது முதல் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வரி அடுக்கு | ||
0 To 3,00,000 ரூபாய் | 0% | 0 To 5,00,000 ரூபாய் | 0% |
3,00,001 ரூபாய் To 5,00,000 ரூபாய் | 5% | 5,00,001 ரூபாய் To 10,00,000 ரூபாய் | 20% |
5,00,001 ரூபாய் To 10,00,000 ரூபாய் | 20% | 10,00,001 மற்றும் அதற்கு மேல் | 30% |
10,00,001 மற்றும் அதற்கு மேல் | 30% | – | – |
மேலும் இத்தகைய அறிவிப்பானது ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறை படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ தமிழக மக்களே வீடு, நிலம் வாங்க போறீங்களா.. அப்போ உங்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது அது என்ன தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |