புதிய தொழிலாளர் சட்டம் அமல்
இன்றைய பதிவில் புதிய தொழிலாளர் சட்டம் பற்றி பார்க்க போகிறோம். இந்தியாவில் பழைய தொழிலாளர் சட்டத்திற்கு பதிலாக மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டுள்ளது. இதில் ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி,அதிக நீரை வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் , பெண்களுக்கு இரவு நேரத்தில் போன்றவை இந்த சட்டவிதிகளில் குறிப்பிட்டுள்ளன. இந்த தொழிலாளர் சட்டங்களில் பெரிய மாற்றம். இனிமேல் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டம் தான். சம்பளம், தனி நபர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு எல்லாம் இனி எளிமையாகும். வேலை தேடும் அனைவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கட்டாயம். பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறப்பு சலுகைகள். இது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
மேலும், நான்கு தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 முதல் அமல்படுத்தபடுகின்றன. புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பல வருடமாக இருந்த 29 பழைய சட்டங்களுக்கு பதிலாக வந்துள்ளன. இந்த புதிய சட்டங்கள் தொழில்சாலைகளில் வேலை செய்பவர்கள் முதல் ஆன்லைன் செயலிகள் மூலம் வேலை செய்பவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கியது. தொழிலார்களுக்கு சம்பளம் எப்படி கொடுக்கபட வேண்டும், தொழிலாளர்களை எப்படி பாதுகாக்க வேண்டும், நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றி இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் புதிய தொழிலாளர் சட்டம் பற்றி பார்க்கலாம் வாங்க….
புதிய தொழிலாளர் சட்டம்:
இந்த சட்டங்களை சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களை மையமாக கொண்ட மிக விரிவான மற்றும் முற்போக்கு சிந்தனைகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.இதன் மூலம் நமது தொழிலாளர்களுக்கு பெரும் அதிகாரத்தை அளிக்கிறது. மேலும். இது அனைத்து நிறுவனங்களுக்கும் சட்ட விதிகள் பின்பற்றுவதை எளிதாக்குகிறது.மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது.
தொழிலார்களின் பலன் :
இந்த சட்டம் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் சம்பளம் பாதுகாப்பான வேலை மற்றும் இடங்கள் நமது மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுக்கான வலுவான அடித்தளமாக இருக்கும். மேலும் , தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் எதிர்காலத்தை இது உருவாக்கும். இந்த சட்டம் வேலைவாய்ப்பை அதிகாரிக்கும்.
இந்த புதிய சட்டம் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களை முதன் முறையாக சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் நியமன கடிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு குறைந்தபட்ச ஊதியத்தை கொண்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனை வழங்கப்படும். ESIC காப்பீடு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
| இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |














