வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு RBI-யை அறிவித்த குட் நியூஸ்..! இனிமேல் EMI தாமதமாக செலுத்தினால் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும்.! வட்டி கிடையாது….!

Advertisement

New RBI Rules for Personal Loan in Tamil

இன்றைய சூழலில் இந்த உலகில் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் வாங்குவதற்கு முதலில் தேவைப்படுவது பணம் தான். அப்படி தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருப்போம். ஆனாலும் அதையும் தாண்டி நமக்கு பணம் தேவைப்படும். அப்பொழுது என்ன பண்ணுவோம் என்றால் நாம் அனைவரிடமும் ஒரு பதில் தான் இருக்கும் வங்கியில் அல்லது நிதிநிறுவங்களிடம் கடன் பெற்றுக்கொள்வோம். அப்படி நாம் பெரும் பலவகையான கடன்களில் ஒன்று தான் தனிநபர் கடன். வங்கிகளில் இந்த தனிநபர் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் RBI-யை ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு அதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க.

New RBI Guidelines for Personal Loan in Tamil:

New RBI Guidelines for Personal Loan in Tamil

திடீரென ஏற்படும் மருத்துவ செலவு, திருமண செலவு உள்ளிட்ட அவசர நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் பலரும் நாடுவது தனிநபர் கடனை தான்.

இந்த தனிநபர் கடனை அனைத்து வகையான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. அதேபோல் இந்த தனிநபர் கடனில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் விதிப்பதுதான் விதிமுறைகள்.

ஏனெனில் இந்த கடன் முக்கியத்துவம் வாய்ந்த கடன் பட்டியலில் வருவதில்லை. அதனால் சில நிதி நிறுவனங்கள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருக்கும்.

மேலும் இந்த கடனுக்கு விதிக்கப்படும் அபராத தொகையின் அளவு அதிகமாகவே இருக்கும். இவற்றையெல்லாம் கட்டுப்படும் விததில் தான் வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பான RBI-ஐ புதிய விதிமுறையை தற்போது அறிவித்துள்ளது.

அதாவது தனிநபர் கடன் பெற்றவர்கள், அதை திரும்ப செலுத்த தவறும் போது விதிக்கப்படும் அபராதத் தொகையில் வெளிப்படை தன்மை தேவை என்று RBI-ஐ தெரிவித்துள்ளது.

மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பலவும் தங்களின் வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடன் அவர்களால் விதிக்கப்படும் அபராத தொகை அமைந்துள்ளது.

அதேபோல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பலவும் தங்களின் வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான EMI செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்காக அதிக அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் RBI-ஐ தெரிவித்துள்ளது.

வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா

RBI Rules for Personal Loan in Tamil:

RBI Rules for Personal Loan in Tamil

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களான NBFC-யின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இந்த வங்கிகள் வளர்ச்சி பாதையில் பயணிப்பதற்காக பொதுமக்கள் பெரும் வேதனைகளை அடைய வேண்டியுள்ளது.

RBI-ஐ தற்போது தனிநபர் உள்ளிட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதம், அபராத தொகை ஆகியவற்றை வங்கிகள் மற்றும் NBFC நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய விதிமுறை 2024ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும் RBI-ஐ அறிவித்துள்ளது. இந்த இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் RBI-ஐ கூறியுள்ளது.

அதாவது NBFC, கூட்டுறவு வங்கி, வீட்டு கடன் நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

 மேலும் RBI-ஐ அறிவித்துள்ள புதிய விதிமுறையில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. அதாவது வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் EMI செலுத்த தவறும் போது நியாயமான அபராதத்தை விதிக்க வேண்டும். 

அதேபோல் கடனுக்கான வட்டி விகிதம் நிலையான வட்டியாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் பயனடைவர்கள் என்றும் RBI-ஐ தெரிவித்துள்ளது.

SBI வங்கியில் 30 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement