New Rules And Regulations In IPL 2025 In Tamil
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் பிசிசிஐ புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் பௌலர்களுக்கு சாதாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் போட்டிகளின் முடிவையே கூட மாற்ற வாய்ப்பு இருக்கிறது.
இந்த விதிமுறைகள் போட்டியின் சுவாரசத்தையும், போட்டியின் முடிவையும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஐபிஎல் போட்டி வந்துவிட்டாலே ரசிகர்கள் எந்த அணி வெற்றி அடைய போகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். இப்பொழுது இந்த புதிய விதிமுறைகளால் ஐபிஎல் ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இன்றைய பதிவில் பிசிசிஐ விதித்துள்ள புதிய விதிமுறைகளை பார்க்கலாம் வாருங்கள்.
IPL Players Who Miss The 2025 IPL Match In Tamil
பிசிசிஐ அறிவித்த புதிய விதிமுறைகள்:
கொரோனா காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக பந்தின் மீது பவுலர்கள் எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எச்சில் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்ததால் இந்த தடை ஏற்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா முற்றிலும் குறைந்த நிலையில் இதுகுறித்து முன்னணி பவுலர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் பேட்டி அளித்திருந்த முகமது ஷமி, எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்ததால் ரிவர்ஸ் ஸ்விங்கில் பந்து வீச முடியவில்லை. எனவே எச்சில் பயன்படுத்துவதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்தை மற்ற முன்னணி பவுலர்களும், முன்னாள் வீரர்களும் வலியுறுத்தியிருந்தனர். இதனால் தற்போது எச்சில் பயன்படுத்துவதன் மீதான தடையை ஐபிஎல் தொடரி பிசிசிஐ நீக்கியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் 2 ஆவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகம் இருந்தால் 2 பந்துகளை பயன்படுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் 11 ஆவது ஓவருக்கு பின்னர் புதிய பந்துகளை பயன்படுத்திக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
பிசிசிஐ அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இந்த அறிவிப்புகள் ஐபிஎல் போட்டியை சுவாரசியம் நிறைந்ததாக மாற்றும் என்பதால் இதற்கு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.
ஆட்டத்தின் 2 ஆவது இன்னிங்சின் போது பனிப்பொழிவு ஏற்பட்டால் அது பேட்டிங் செய்யும் அணிக்கே பெரும்பாலும் சாதகமாக அமையும். ஆனால் பிசிசிஐ அந்த சூழலில் 2 பந்துகளை பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதால் மேட்ச்சின் ரிசல்ட்டே மாறக்கூடும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஐபிஎல் ராசிக்காரர்கள் போட்டியின் வெற்றி பெரும் அணியை தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியில் வெற்றி பெரும் அணி யார் என்று வெயிட் பண்ணி தெரிந்துகொள்வோம்.
IPL Streaming Rights 2025 In Tamil
இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |