New Rules for Sim Card 2025
தொழில்நுட்பம் வளர்வது ஒரு விதத்தில் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் தீமைகளும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏனென்றால் எதனை எடுத்தாலும் மோசடிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் சைபர் மோசடி சமீப காலமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது, இதனால் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தூண்டியுள்ளது. சமீபத்திய நடவடிக்கையாக, நாடு முழுவதும் சிம் கார்டுக்கு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.
புதிய சிம் கார்டு விதிமுறை:

எப்படி சிம்கார்டை இதுவரை பெற்றார்:
இதுவரை சிம்கார்டை வாங்குவதற்கு வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் கொடுத்தாலே சிம்கார்டை பெற்று கொள்ளலாம். ஆனால் இப்போது இந்த ஆதாரங்கள் கொடுப்பது மட்டுமில்லாமல் ஆதார்-பயோமெட்ரிக் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன்களில் பிரபலமாகும் இ சிம்கள்.. இ சிம் என்றால் என்ன? அதன் சிறப்பம்சம்
எதற்காக இந்த விதிமுறை:
போலி ஆவணங்களுடன் பெறப்பட்ட சிம் கார்டுகள் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணையில் பல முறை நிறைய சிம் கார்டுகள் ஒரே சாதனத்தில் செயலில் இருப்பது கண்டறியப்பட்டது, இதன் மூலம் மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் செய்யப்படுவது தெரியவந்தது. அதனால் தான் இந்த விதிமுறையும் கொண்டு வந்துள்ளனர்.
எப்படி வேலை செயயும்:
நீங்கள் வாங்கும் சிம் கார்டுக்கு பயோமெட்ரிக் சரிபார்க்கப்படும். இதில் 10 விதங்களில் புகைப்படத்தை எடுப்பார்கள். போலி சிம் கார்டுகள் ஏதும் உள்ளதா,ஒரே சாதனத்தில் பல சிம் கார்டுகள் உள்ளதா என்பதையும் சரிபார்க்கப்படும்.
விதிகளை மீறினால் சட்டம்:

பயோமெட்ரிக் சரிபார்ப்பு இல்லாமல் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு
அபராதம் விதிக்கப்படும், மேலும் சிம் கார்டுகளை விற்பனை செய்வதிலிருந்தும் தடைசெய்யப்படலாம்.
புதிய விதிமுறைகளினால் என்ன நன்மை :
- சைபர் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
- போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகள் தடை செய்யப்படும்.
- போலி அடையாளங்களை தவறாகப் பயன்படுத்த வகையில், ஒவ்வொரு நபரின் பெயரிலும் உள்ள செயலில் உள்ள சிம் கார்டுகள் கண்காணிக்கப்படும்.
| இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |














