சமூக வலைத்தளங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக சொல்ல வேண்டிய விஷயங்கள்..!

Advertisement

சமூக வலைத்தளம்

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளம் பற்றி நாம் அனைவரும் நிறைய புதுப்புது விஷயங்களை அறிந்து கொண்டு இருக்கிறோம். அப்படி இருந்தாலும் கூட அதில் நாம் பார்க்கும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக இப்போது எல்லாம் சமூக வலைத்தளத்தில் புதிதாக ஒரு பொருளோ அல்லது உடையோ அறிமுகம் செய்தால் நாம் உடனே அதை வாங்கி விடுவோம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதனை பற்றி தெளிவாக விளம்பரம் செய்வதும் கூட என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இன்றைய பதிவில் சமூக வலைத்தளங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது மத்திய அரசின் விதிமுறையின் படி கண்டிப்பாக சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

New Rules For Social Media:

சமூக வலைத்தளம்

Rule- 1

  • சமூக வலைத்தளமான You Tube, Facebook, Twitter மற்றும் Instgram போன்ற செயலிகளில் ஒரு பொருளை வாங்குவதற்கு அதனை பற்றி நீங்கள் கொடுக்கும் தகவலில் அது என்ன Product, Service, Brand மற்றும் Experience இவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
  • அதனை தொடர்ந்து Advertisement, Sponsor மற்றும் Paid Promotion இந்த மூன்றில் ஒன்றை கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட வேண்டும்.

Rule- 2

  • அடுத்து பார்க்க போகும் ரூல்ஸ் என்னவென்றால் நீங்கள் ஒரு பொருளை விளம்பரம் செய்யும் போது இது வெறும் விளம்பரம் மட்டுமே என்று கூறும் வகையில் ஆடியோ அல்லது வீடியோவில் Harto Mis Format-ல் தெளிவாக மற்றும் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறையாகும்.

Rule- 3

  • நீங்கள் ஒரு வீடியோவை தொகுத்து வழங்கும் போது விளம்பரம் வரும் இடத்தில் அந்த வீடியோவின் மேலே இது விளம்பரம் தான் என்ற வார்த்தையினை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.

Rule- 4

  • ஒரு பொருளுக்கான தகவலை நீங்கள் தொகுத்து வழங்கும் போது எந்த மொழியில் நீங்கள் வீடியோ மற்றும் ஆடியோவை வழங்குகிறீர்களோ அந்த மொழியிலேயே விளம்பரத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். 
  • வேறு மொழியினை மாற்றி கூறக்கூடாது என்பது மத்திய அரசு கூறிய 4- வது விதிமுறையாகும்.

Rule- 5

  • ஒரு பதிவினை நீங்கள் வழங்கும் போது இடையில் நீங்கள் வேறு ஒரு பொருளை பற்றியோ அல்லது ஹோட்டல் பற்றியோ தொடர்பு இல்லாமல் கூறினால் இது விளம்பரம் மட்டும் தான் உண்மை இல்லை என்று நீங்கள் அதற்கு கீழே தெளிவாக கூற வேண்டும்.

Rule- 6

  • நேரலையாக நீங்கள் ஒரு தொகுப்பினை வழங்கும் போது அந்த வீடியோ ஆரம்பம் முதல் முடியும் வரையில் கட்டாயமாக Advertisement, Sponsor மற்றும் Paid Promotion இந்த மூன்றில் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.

Rule- 7

  • Twitter-ல் நீங்கள் ஒரு பதிவினை போட்டால் அந்த பதிவில் நீங்கள் விளம்பரம் செய்யப்படும் பொருளின் Brand Name கண்டிப்பாக கூறியிருக்க வேண்டும் என்பதே 7- வது விதிமுறையாகும்.

Rule- 8

  • முக்கியமாக நீங்கள் எந்த பொருள் மற்றும் வேறு ஏதாவது பற்றி விளம்பரம் செய்வதற்கு முன்பு அதனை பற்றி நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்வது மிகவும் நல்லது.

Rule- 9

  • நீங்கள் விளம்பரம் செய்வதற்கு முன்பு அந்த பொருள் பொய்யானது மற்றும் தரம் இல்லாதது என்று தெரிந்த பிறகு அதனை பற்றி விளம்பரம் செய்ய கூடாது என்பது 9-வது விதிமுறையாகும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா..! அப்படினா நீங்கள் உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement