New Rules From 1 June 2023
பொதுவாக ஒரு மாதமோ அல்லது வருடமோ பிறக்கிறது என்றால் அதற்கான வரவேற்பு என்பது மக்களிடம் அதிகமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அந்த மாதத்தில் நாம் பயன்படுத்தும் விலைவாசி பொருட்களின் விலையில் மாற்றம் ஏதும் இருக்கிறதா என்பதில் மக்களிடையே பெரிய கேள்விகள் இருக்கும்..? அத்தகைய கேள்விக்கான பதிலும் ஓரிரு நாட்களிலே கிடைத்து விடும். அதாவது அத்தகைய மாதத்தில் எதற்கு எல்லாம் விலை அதிகரிக்கப்போகிறது என்றும் தெரிந்து விடும். ஆனால் அதில் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி இரண்டுமே கலந்து தான் காணப்படும். அந்த வகையில் இன்று ஜூன் மாதம் 1-ஆம் தேதி பிறந்துவிட்டது. ஆகவே இந்த மாதத்தில் எவற்றில் எல்லாம் மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ஜூன் 1 எவற்றில் எல்லாம் மாற்றம்:
சிலிண்டர் விலை:
பொதுவாக பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆகியவற்றின் விலை ஆனது கச்சா எண்ணெயின் விலையினை பொறுத்து தான் அமைகிறது.
அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான சமையல் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்காலாம் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் மத்திய அரசின் முடிவால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பேங்க் லாக்கர் ரூல்ஸ்:
அதாவது ஒவ்வொரு வங்கியிலும் இருக்கும் லாக்கரை பராமரிப்பதற்கு என்று தனியாக வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது SBI பேங்க் மற்றும் BOB பேங்க் இந்த இரண்டு வங்கிகளிலும் லாக்கரை பராமரித்த வாடிக்கையாளர்கள் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கையெழுத்து இட வேண்டும் என்று புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து மற்ற வங்கிகளிலும் இத்தகைய மாற்றம் விரைவில் வரும்.
Latest News👉👉 வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு
வங்கி பரிவர்த்தனை இல்லாத கணக்கு:
எந்த ஒரு நபர் அவர் வைத்து இருக்கும் வங்கி கணக்கில் 10 வருடமாக பண பரிவர்த்தனை இல்லாமல் வைத்து இருக்கிறார்களோ அத்தகைய கணக்கு ஆனது உரிமை கோராத வைப்புத்தொகையாக மாறும்.
ஆகவே இதுபோல் உரிமை கோராத வைப்புத்தொகையாக இருக்கும் 100 கணக்குகளை 100 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீக்க வேண்டும் என்று விதி அமலுக்கு வர இருக்கிறது.
மின்சார வாகனம் மானியம்:
மின்சார இருசக்கர வாகனங்களுக்கு FAME-II திட்டத்தின் கீழே வழங்கப்படும் 40% மானியம் ஆனது தற்போது 15% ஆகா ஜூன் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு குறைக்க உள்ளது. ஆனால் இத்தகைய மாற்றம் காரணமாக வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள மாற்றங்கள் இல்லாமல் மற்ற சில விதிகளிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Latest News👉👉 Fixed Deposit -க்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட இதில் வட்டி அதிகமாகவே இருக்கிறது
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














