கேஸ் சிலிண்டருக்கு ஓடிபி உட்பட நவம்பர் 1 முதல் 5 விதிகள் அமல்! – New Rules From 1 November
New Rules From 1 November – ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் புதிய புதிய அறிகிகளை அறிவிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அந்த வகையில் நவம்பர் 1 அதாவது எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
LPG சிலிண்டர் பெற OTP கட்டாயம்:
LPG சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் LPG சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும். சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது OTP கொடுத்தால் மட்டுமே டெலிவரி செய்யப்படும்.
மின்சார மானியத்திற்கான புதிய விதிகள்:
டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல் மின்சார மானியம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மின் மானியத்திற்கு பதிவு செய்யாத மக்களுக்கு அதன் பலன் கிடைக்காது.
GST மாற்றம்:
இன்று முதல், வரி செலுத்துவோர் 5 கோடி ரூபாய்க்கும் குறைவான GST ரிட்டனில் நான்கு இலக்க HSN குறியீட்டை வழங்குவது கட்டாயமாகும்.
காப்பீட்டு பெற KYC கட்டாயம்:
காப்பீட்டு கோரிக்கைகளுக்கு KYC கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022-ம் ஆண்டு இன்று முதல் உடல்நலம் மற்றும் பொது காப்பீட்டிற்கு KYC சரிபார்ப்பு கட்டாயம் என கூறியுள்ளது.
ரயில்களுக்கான புதிய கால அட்டவணை:
இந்திய ரயில்வே ஒருசில தொலைதூர ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த புதிய அட்டவணை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய அட்டவணையால் 13,000 பயணிகள் ரயில்கள் மற்றும் 7,000 சரக்கு ரயில்களின் நேரம் மாறும் என கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |