New Scheme in April 2023
ஹலோ பிரண்ட்ஸ்..! அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது இருக்கும். அதுபோல நமக்கு பணக்கஷ்டம் என்று வரும் போது நமக்கு உதவி செய்ய முன் வருவது நாம் சேமித்து வைத்த பணம் தான்.
அதனால் தான் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் போதே பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல நமக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அது என்ன திட்டம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. அது என்ன திட்டங்கள், அதன் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பதை பற்றி தான் காணப் போகின்றோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
போஸ்ட் ஆபிஸின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா |
அதுபோல போஸ்ட் ஆபிஸில் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.
அமலுக்கு வந்த புதிய திட்டங்கள்..!
♦ புதிய நிதி ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
♦ அதுபோல அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை 12.12 சதவீதம் முதல் உயருகிறது. மேலும் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கும்.
போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளரே இன்னுமா நீங்க இந்த குட் நியூஸை தெரிஞ்சிக்கல |
♦ தமிழ் நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்ககளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.217 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அது இந்த நிதி ஆண்டில் ரூ.229 ஆக உயருகிறது.
♦ வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
♦ அரசு சாரா ஊழியர்கள் ஓய்வு பெறும்போது விருப்ப பணப்பட்டுவாடா மீதான வரி விலக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயருகிறது.
என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |