சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
நம் முன்னோர்களின் காலத்தில் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியை பயன்படுத்தினார்கள். இதனால் சுற்றுசூழல் மாசுபாடு அடையாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தோம். ஆனால் இன்றைய காலத்தில் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியை பார்க்க கூட முடியவில்லை. எல்லாரும் வீட்டிலுமே பைக் மற்றும் கார்கள் என் வாகனங்கள் இருக்கின்றது. ஒரு பைக்கெல்லாம் இல்லங்க ஒரு வீட்டில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை நபருக்கும் தனித்தனியாக வண்டி இருக்கிறது. இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் வண்டி ஓட்டுகிறார்கள். மேலும் சாலையில் வாகன நெரிசல் என்பது அதிகமாக காணப்படுகிறது. இதோடு மட்டுமில்லாமல் விபத்துகளும் அதிகமாக நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஆனது வாகனங்களுக்கான வேக விதியை அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாகனங்களுக்கான விதி:
வாகனங்களுக்கான விதியானது நவம்பர் 4-லிருந்து சென்னையில்அமல்படுத்தியுள்ளது. இதனை பற்றிய விவரத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
இலகுரக வாகனம்:
இலகுரக வாகனம் ஆனது அதிகபட்சமாக 60கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். இதனை விட குறைவாக செல்லலாம். ஆனால் இதை விட வேகமாக செல்ல கூடாது.
கனரக வாகனம்:
கனரக வாகனம் ஆனது 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். இதை விட வேகமாக ஓட்ட கூடாது.
ஆட்டோ:
ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
குடியிருப்பு பகுதிகள்:
குடியிருப்பு பகுதிகளில் எல்லா வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். இந்த வேகமானது அணைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |