New Tax Rules How Much Money Keep in Home
ஒரு நபர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்று புதிய விதிகளை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வீட்டில் பணத்தை வைத்திருப்பது இரண்டு விஷயங்களை பொறுத்து அமைகிறது. ஒன்று நிதிநிலைமை மற்றொன்று பணவர்த்தனை பொறுத்து அமைகிறது. பணத்தை இவ்வளவு தான் வைத்திருக்க வேண்டும் என்று வரம்புகள் இல்லை.. ஆனால் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் வருமான வரித்துறை விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாற போகுதாம் மத்திய அரசு அறிவிப்பு…! தெரியலன்னா உடனே தெரிஞ்சுக்கோங்க…!
New Tax Rules:
ஒருவர் வருமான வரி விதிகளின் படி வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஆனால் உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது, அது எங்கிருந்து வந்தது மற்றும் அதன் ஆதாரம் என்ன என்பது பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். வருமான வரித்துறையோ அல்லது மற்ற அதிகாரிகளோ அதிக பணத்தை கைப்பற்றினால், பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது..? யாரிடமிருந்து வந்தது..? போன்ற முக்கியமான ஆதாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்டும். இல்லயென்றால் அதிகாரிகள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். பணத்திற்கான சரியான கணக்குகள் மற்றும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும், தவறினால் வருமான வரித்துறை பெரும் அபராதத்தை விதிக்கும். ஒருவரின் வீட்டில் தகுந்த ஆதாரம் இல்லாமல் பணத்தை கைப்பற்றினால் வருமான வரித்துறை உங்களின் மொத்த தொகையில் இருந்து 137% அபராத வரித்துறை விதிக்கும்.
• ஒரு வருடத்தில் 20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும்.
• ஒரு வருடத்திற்கு வங்கியில் இருந்து 1 கோடிக்கு மேல் பணத்தை எடுத்தால் TDS செலுத்த வேண்டும்.
• ஒரு வருடத்தில் 20 லட்சத்திற்கு பணப்பரிவர்த்தனை தேய்த்தால் அபராதம் விதிக்கப்படும். 2 லட்சத்துக்கு அதிகமாக எதையும் பணம் கொடுத்து வாங்க முடியாது, அப்படி பணமாக கொடுத்து வாங்கினால் பான் மற்றும் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டும்.
• கிரெடிட்-டெபிட் கார்டு மூலம் ஒரே நேரத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்தால் வருமான வரித்துறை விசாரணை செய்யப்படும்.
• நீங்கள் மற்றவர்களிடமிருந்து 2 லட்சத்துக்கு அதிகமாக பணத்தை வாங்க கூடாது. வங்கிகள் மூலம் மட்டுமே வாங்க வேண்டும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |