ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாட்டில் வந்த 8 முக்கிய மாற்றங்கள்..!

Advertisement

New Year 2024 brings important changes

நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரி மாதமான 1-ஆம் தேதி முதல் நாட்டில் மிக முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அது குறித்த தகவல்களை பற்றி இப்பொழுது ஆம் நமது பொதுநலம்.காம் பதிவில் படித்தறியலாம் வாங்க.

டிஜிட்டல் KYC:

தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிஜிட்டல் KYC செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது. பயனாளர்களின் பயோ மெட்ரிக் விவரங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகே இனி சிம் கார்டுகள் கொடுக்கப்படும்.

புதிய சிம் கார்டுகளை வாங்க இனி பயனர்கள் காகித படிவங்களை நிரப்ப தேவை இல்லை. அதற்கு பதிலாக இப்பொழுது டிஜிட்டல் KYC கட்டாயமாக்கப்படும்.

ITR:

2022 மற்றும் 2023-ஆம் ஆண்டிற்கான புதிப்பிக்கப்ட்ட ITR-ஐ தாமதமான கட்டணத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில். ஜனவரி 1-ஆம் தேதி முதல் வரி செழுப்புபவரின் வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் 5000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதே சமையம் வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அபராதம் தொகை 1000 ரூபாய் ஆகும்.

RBI அறிவிப்பு:

வடிக்கையாளர்களின் லாக்கர் ஒப்பந்தத்தை திருத்தியமைக்குமாறு அனைத்து வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திடவில்லை என்றால், ஜனவரி ஓன்று முதல் லாக்கர் முடக்கப்படும். இதனால் அதில் உள்ள நகை, பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது.

UPI ஐடி:

கடந்த ஓராண்டு அல்லது அதற்கு மேலாக பயன்படுத்தப்படடத Paytm, Google Pay, Phonepe போன்ற ஆன்லைன் பேமண்ட் செயலியில் UPI ID-கள் ஜனவரி ஒன்றாம் நீக்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த App மூலம் நேரடியாக பிரதமர் மோடியிடம் நாம் பேசலாமா!

ஆதார் அட்டை:

ஆதார் அட்டைகள் கட்டணம் இன்றி மாற்றங்கள் செய்வதற்க்கான அவகாசம் 31.12.2023 அன்றுடன் முடிவடைந்தது. ஜனவரி முதல் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

DHL குழுமம்:

ப்ளூ டார்ட் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் ப்ராண்டுகளை இயக்கம் DHL குழுமம். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பார்த்தல்களை அனுப்புவதற்கான சாதாரண கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

காப்பீட்டு நிறுவனம்:

பாலிசிதாரர்கள் தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறியவும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சிறந்த முறையில் புரிந்துகொள்ள, பாலிசி தொடர்பான முக்கிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு ஜனாவை ஓன்று முதல் தனித்தனியாக வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களே, இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி முகமே கேட்டுக்கொண்டுள்ளது.

கார் விலை அதிகரிப்பு:

மாருதி சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஆடி இந்தியா உட்பட இந்தியாவில் உள்ள பல வாகன உற்பத்தியாளர்கள், ஜனவரி 2024 இல் தங்கள் பயணிகள் வாகனங்களின் விலைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி மாருதி, ஹூண்டாய், டாடா, ஆடி போன்ற நிறுவங்கள் பணம்விக்கம் மற்றும் பொருள்களின் விலை உயர்வை காரணம் காட்டி, கார்களின் விலை 2% அதிகரிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement