இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதி யார் தெரியுமா?

Next Indian Army Chief in Tamil

Next Indian Army Chief in Tamil

இந்தியாவின் முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்த செய்தியை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்:

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. அங்கு 08.12.2021 ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 13 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் ஆற்றிய பணிகள்:

  1. தந்தை பணியாற்றிய அதே பிரிவில் 1978-ஆம் ஆண்டு பிபின் ராவத் ராணுவத்தில் இணைந்தார்.
  2. படைப்பிரிவின் தளபதி, கமாண்டிங் இன் சீப், தெற்கு கட்டளை அதிகாரி, உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
  3. கர்னல் ராணுவ செயலாளர், ராணுவ இணைச் செயலாளராகவும் பிபின் ராவத் பணியாற்றியுள்ளார்.
  4. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பிபின் ராவத் அங்கம் வகித்துள்ளார்.
  5. வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகள், இந்திய – சீன எல்லைப்பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவம் பிபின் ராவத்திற்கு உண்டு.
  6. ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27 வது தலைமை தளபதியாக டிசம்பர் 31, 2016 முதல் பொறுப்பேற்றார்.
  7. பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் அன்று முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
  8. முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதல் நபராக பிபின் ராவத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
  9. பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய முப்படை தலைமை தளபதி யார்? | Next Indian Army Chief in Tamil

இந்நிலையில், இவரது திடீர் மரணத்தால் அடுத்த முப்படை தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், இராணுவ தளபதி எம்.என்.நரவனே முப்படை தளபதியாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவ தளபதியான எம்.என்.நரவனே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருப்பவர் 65 வயது வரை பதவியில் நீடிக்கலாம்.

இதனால் தற்போதைய நிலையில் முப்படைகளின் தளபதிகளில் மூத்த அதிகாரியாக எம்.என்.நரவனே உள்ளாதால், இவரே முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதி நாட்டின் 27-வது இராணுவ தளபதியாக நரவனே பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இராணுவ துணை தளபதியாக இருந்த இவர், அதற்கு முன்பு சீனாவுடனான 4,000 கி.மீற்றர் எல்லை பகிர்வு உள்ள கிழக்கு பிராந்திய தளபதியாகவும் இருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகளை ஒழித்து கட்டுவதில் முனைப்புடன் பணியாற்றினார். இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் இவர் இடம்பெற்றிருந்தார்.

மேலும், இவரைத் தவிர ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியாவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

முப்படை தளபதி பிபின் ராவத் வரலாறு

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com