வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் கரண்ட் பில் குறிப்பதில் இவ்வளவு மாற்றமா..! வெளியானது புதிய தகவல்..!

Updated On: April 11, 2023 9:50 AM
Follow Us:
no electricity will be charged for smart meters in tamilnadu in tamil
---Advertisement---
Advertisement

வீட்டில் மின்சாரம்

இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவருடைய வீட்டிலும் மின்சாரம் உள்ளது. அதுவும் கொஞ்சம் நேரம் கரண்ட் இல்லை என்றால் கூட வீட்டில் இருக்க முடியாது என்பது போல தற்போதைய நிலைமை ஆகிவிட்டது. இதோடு மட்டும் இல்லாமல் சிலர் வீட்டில் கரண்ட் பில் எவ்வளவு இருந்தாலும் கூட பரவாயில்லை என்று வீட்டில் AC, பிரிட்ஜ், மிக்சி மற்றும் கிரைண்டர் என அனைத்தினையும் உபயோகப்படுத்தி வருகிறார்கள். நாம் உபயோகப்படுத்தும் அளவினை பொறுத்து தான் நம்முடைய வீட்டிற்கு கரண்ட் பில் கட்டணம் வரும். இத்தகைய கரண்ட் பில் ஆனது ஒவ்வொரு வீடாக வந்து மின்சார துறையில் இருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறிக்கப்படுகிறது. இதுநாள் வரையிலும் இப்படி தான் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால் இதில் புதிதாக சில மாற்றங்கள் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் அத்தகைய மாற்றங்கள் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ திருமணம் ஆக போகும் பெண்ணா நீங்கள்.. அப்போ அரசு அறிவித்த புதிய விதியை தெரிஞ்சிக்கோங்க.. 

ஸ்மார்ட் மீட்டர்:

தமிழக அரசானது தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்களை நடைமுறை படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயன்படும் வகையில் ரேஷன் கார்டு பயனாளருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையினை அறிவித்துள்ளது.

அதோடு மட்டும் இல்லமால் இதுநாள் வரையிலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கரண்ட் பில் குறிக்கப்பட்டு இருந்ததில் மாற்றம் கொண்டு வரும் வகையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்படும் என்ற அறிவிப்பினை அறிவித்துள்ளது.

அதாவது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கரண்ட் பில் மின்வாரிய துறையில் இருந்து வீட்டில் இருக்கும் மின் பயன்பாட்டை கணிக்கிடு செய்து அதன் மூலம் ஒரு வீட்டிற்கான மின்சார கட்டணம் குறிக்கப்பட்டு  வருகிறது.

இவ்வாறு செய்வதனால் குறைந்த மின்சார கட்டணம் வருவோருக்கு கூட அதிக கட்டணம்  செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆகையால் இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து அனைத்து வீடுகளிலும் ஸ்மாட்ர் மீட்டர் பொறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதன் காரணமாக இனி மின்வாரியத்தில் இருந்து யாரும் வீடு வீடாக வந்து மின்சார அளவினை குறிக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டரே மின்சார அளவினை குறித்து வைத்து விடும்.

அதன் பிறகு மின்வாரியத்தில் இருந்து உங்களுடைய தொலைபேசிக்கு மின்சார பயன்பாட்டின் அளவு மற்றும் தொகை இரண்டுமே SMS வாயிலாக தெரிவிக்கப்படும். அதனை தெளிவாக பார்த்து மக்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும் என்றும் அவ்வாறு கடைசி தேதிக்குள் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் கட்டணம் செலுத்திய பிறகு தான் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கான நடைமுறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த விதமான கட்டணமும் மக்கள் செலுத்த வேண்டாம்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி..  இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now