வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நூறு நாள் வேலை திட்டத்தில் புதிய அறிவிப்பு 

Updated On: January 5, 2026 6:30 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

100 நாள் வேலை திட்டம் 

இன்றைய பதிவில்  நூறு நாள் வேலை திட்டத்தில் புதிய அறிவிப்பு பற்றி பார்க்க போகிறோம். 2005 ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த சட்டம், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.இவ்வாறு வேலை செய்பவர்களுக்கு NEFMS மென்பொருள் கொண்டு ஆதார் இணைப்பு மூலம் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கிராம புறங்களில் மத்திய அரசு அறிவித்த 100 நாள் வேலை திட்டமானது பெரும்பாலும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் செல்கிறார்கள். நிறைய நபர்கள் நான் அரசு வேலை செய்கிறேன் என்று பெருமையாக கூறும் பட்சத்தில் இந்த 100 நாள் வேலை திட்டம் என்பதமும் ஒரு அரசு வேலை தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசானது ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…..

புதிய அறிவிப்பு :

  • கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக உறுதி வேலைவாய்ப்பு திட்டத்தை பெயர் மாற்றி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இத்திட்டத்தின் பெயர் விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) என்பதாகும். இந்த புதிய மசோதா பழைய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைக்கிறது. 
  • இந்த புதிய மசோதா ஒவ்வொரு ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பிற்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிப்பதன் மூலம் விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்கு பார்வைக்கு இணக்கமாக ஒரு கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
  •  இது பற்றிய சுற்றறிக்கை எம்.பி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
  • இந்த நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிராக மக்களவையில் திமுக நோட்டிஸ் அறிவித்துள்ளது. மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விபி-ஜி ராம் ஜி என்ற பெயர் சர்ச்சை பற்றி விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டிஸை திமுக டி ஆர் பாலு அறிவித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு…! அரசு எடுத்த அதிரடி முடிவினால் மகிழ்ச்சியில் மக்கள்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now