இந்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளில் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

Advertisement

சிறுசேமிப்பு திட்டத்திற்கான விதிமுறை தளர்வு 

நமது சேமிப்பு நமது வருங்காலத்தை சிறப்பாக மாற்ற பயன்படுகிறது. அந்த சேமிப்புகளை நாம் முறையாக பயன்படுத்தி வளம் பெற முடியும். ஒவ்வொரு சேமிப்பு திட்டமும் நமக்கு சில விதிமுறைகளை நிபந்தனைகள் உடன் தான் கிடைக்கிறது. அந்த நிபந்தனைகள் சில சமயங்களில் நமக்கு ஒரு பாதுபாப்பின்மையை வழங்குகிறது. அந்த நிபந்தனைகளை விதிமுறைகள் நமக்கு தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்த முடியாத சூழலில் நம்மை இருக்க செய்துவிடும். அந்த விதிமுறைகளுக்கு சில தளர்வுகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இவை நாம் நமது சேமிப்பை தேவைப்படும் போது பயன்படுத்த எதுவாக அமையும். வாருங்கள் இன்றைய பதிவில் அந்த விதிமுறை தளர்வுகள் என்ன என்பதனை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

சிறு சேமிப்பு திட்டத்திற்கான தளர்வு:

அஞ்சலகங்களில் செயல்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களான RD, PPF, சுகன்யா சம்ரிதி யோஜனா, மகிளா சம்மன் சேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை இந்திய அரசு வழங்கி வருகிறது. அதில் நாம் செலுத்தும் முதலீட்டிற்கான வட்டியை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. மேற்கூறிய சிறுசேமிப்பு திட்டங்கள் நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரங்கள் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

பொருளாதார விவகாரங்கள் துறையால் இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் கட்டமைக்கப்படும். அதில் ஏற்படும் மாற்றங்கள் வட்டி விகிதம் போன்றவற்றையும் அந்த துறையின் ஆலோசனையின் படி மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் இப்போது  PPF மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை பொருளாதார விவகாரங்கள் துறை தளர்த்தியுள்ளது.

சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆண்டு கால அளவில் முதலீடு செய்யும் தொகையானது, முதிர்வு காலம் முடியும் முன்னர் திரும்ப பெற இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கணக்கு தொடங்கிய நாளில் இருந்த 4 வருடங்கள் பிறகு நமது கணக்கை முடிக்கும் பட்சத்தில் அந்த திட்டத்தில் பொருந்த கூடிய வட்டி விகிதங்கள் அந்த தொகைக்கு வழங்கப்படும்.

கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு எவ்வளவு ரூபாய் அதிகரிச்சுக்குனு தெரியுமா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement