ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா..? அப்படி என்னங்க ஸ்பெஷல் அதுல..!

Advertisement

  1 மாம்பழத்தின் விலை இவ்வளவா 

ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? என்னனு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு மாம்பழம் சாப்பிட மிகவும் பிடிக்குமா..? அப்போ இந்த தகவலை கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டுமே. இதை மட்டும் தெரிஞ்சிக்கிட்டீங்கனா இனி மாம்பழம் வாங்கி சாப்பிடுற ஆசையே உங்களுக்கு வராது. ஏன் அப்படி சொல்றேனா ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா..? உங்களுக்கே ஷாக் ஆ இருக்கா..? அப்போ வாங்க அந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்னு தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா..? 

ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா

பெரும்பாலும் நம்மில் பலருக்கும் மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். மாம்பழத்தை விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

ஆனால் இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிந்தால் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையே நமக்கு போய்விடும். அதற்கு முக்கிய காரணம் ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரம் ரூபாயாம். அது எந்த நாடுனு உங்களுக்கு தெரியுமா..?

ஒரு மாம்பழத்தை 19 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு விவசாயி விற்பனை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்.. இனி குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு அலைச்சலே வேண்டாம்

ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா

 இது ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒரு விவசாயி தான் விற்பனை செய்து வருகிறார். ஜப்பானில் விவசாயி நககாவா என்பவர் தானே விவசாயம் செய்யும் மாம்பழங்களை அதிக காசுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதுவும் ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சத்திற்கும் விற்பனை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.  

இந்தளவிற்கு விற்பனை செய்ய அந்த மாம்பழத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று நம் அனைவருக்குமே ஒரு கேள்வி இருக்கும். அதை பற்றி இங்கு காணலாம்.

அதிக விலைக்கு காரணம் என்ன..? 

ஒரு மாம்பழத்தின் விலை 19 ஆயிரமா

இந்த மாம்பழங்களை ஜப்பானில் வாழும் அந்த விவசாயி நககாவா அவர்கள் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில் தான் விளைவிப்பதாக கூறுகிறார்.

Latest News 👉 Jio-வின் செம ஆபர்… அதுவும் 399 ரூபாயில் Family Plan மிஸ் பண்ணிடாதீங்க.. 

அப்படி மாம்பழங்கள் விளைவிக்கும் இந்த பகுதி வெப்ப நீரூற்றுகளுக்குப் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த இடத்தில் மாம்பழங்கள் விளைவிப்பதால் தான் இதற்கு இப்படியொரு மவுஸ் இருக்கிறது என்று விவசாயி கூறுகிறார்.

ஜப்பானில் இருக்கும் மாம்பழங்களில் இது தான் சிறப்பு வாய்ந்த மாம்பழம் என்றும் இந்த மாம்பழங்களை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த மாம்பழத்தில் இருக்கும் இந்த சுவைக்கு வெப்பம் மற்றும் பனி தான் காரணம். இதன் உற்பத்திக்காக எந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதும் இல்லை என்று கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல், ஒரு மாம்பழ சீசனுக்கு சுமார் 5 ஆயிரம் மாம்பழங்கள் வரை தான் கிடைக்கும். இதன் காரணமாக தான் மாம்பழத்தை இந்த விலைக்கு விற்பனை செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Latest News 👉Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement