வெங்காய விலை அதிகரிப்பு
அன்றாட தேவைக்கான பொருட்களில் முதலில் இருப்பது பால், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களே ஆகும். அந்த வகையில் மளிகை பொருட்களை வேண்டும் என்றால் நாம் மொத்தமாக மாதத்திற்கு தேவையானது என்று வாங்கி வைத்து கொள்ளலாம். ஆனால் பால் மற்றும் காய்கறிகளை அப்படி வாங்கி வைக்க முடியாது. அதிலும் குறிப்பாக வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி என இந்த பொருட்கள் எல்லாம் அதிகமாக தேவைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் கண்டிப்பாக இவற்றை எல்லாம் வாங்க வேண்டிய நிலை ஆனது ஏற்படும். இதன் படி பார்க்கையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை என்பது அடிக்கடி ஏற்றம் இறக்கமாகவே காணப்டுகிறது. அதன் படி பார்க்கையில் தற்போது வெங்கயத்தின் விலை மிகவும் அதிகமாக மாறிக்கொண்டே போகிறது. ஆகவே இத்தகைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு அளிக்கும் விதமாக மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெங்காயம் விலை உயர்வு:
சாதாரணமான நாட்களியே வெங்காயத்தின் அத்தியாவசிய தேவை என்பது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பண்டிகை நாட்களில் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் பட்சத்தில் தற்போது 1 கிலோ வெங்காயத்தின் விலை சுமார் 85 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஆகவே இவ்வாறு தொடர்ச்சியாக விற்று கொண்டே இருக்கும் பட்சத்தில் மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை சிந்தித்து மத்திய அரசானது தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது 1 டன்னிற்கு 66 ஆயிரத்து 700 ரூபாயாக வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு ஆனது நிர்ணயம் செய்து உள்ளது.
ஏனென்றால் உள்நாட்டு சந்தையில் இதனுடைய இருப்பை உறுதி படுத்தும் விதமாகவும், தற்போது உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடும் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய நிலவரம் ஆனது டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர 2 லட்சம் வெங்காயத்தை கூடுதலாக கொள்முதல் செய்து இருப்பில் வைக்க உள்ளதாகவும், ஏற்கனவே 5 லட்சம் டன் வெங்காயம் மத்திய அரசிடம் இருப்பில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எப்புறா நம்ம Google Pay மூலமா கடன் வாங்கலாமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |