ரேஷன் அட்டைதாரர்களுக்கு
ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய ரேஷன் கார்டு ஆனது அத்திவாசியமான ஒன்றாக உள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும் ரேஷன் கார்டு தான் முதலில் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசாங்கத்தால் அளிக்கப்படும் எந்த ஒரு சலுகையினையும் பெற்று கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கையில் தமிழக அரசனது ரேஷன் கார்டு பயனாளருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்ற புதிய அறிவிப்பினையும் அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசானது ரேஷன் கார்டு பயனாளருக்கு ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. ஆகையால் அத்தகைய செய்தி பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ இனி ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாமாம்.. ஏன்னா ஒரு குட் நியூஸ் வந்துடுச்சு..
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழ்நாடு:
மாதந்தோறும் ரேஷன் அட்டை பயனாளருக்கு அவர் அவருடைய கார்டின் தகுதிக்கு ஏற்றவாறு அரசி, பருப்பு, சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண்டிகைக்கால தொகையாக சில தொகையும் அளிப்படுகிறது. இதுமாதிரி வழங்கப்படும் பொருள் அல்லது வேறு எதுவாக இருந்தால் அதனை அந்த ஊராட்சிக்கான ரேஷன் கடையில் தான் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இனி இதுமாதிரி இல்லாமல் இருப்பதற்கு விரைவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வருவதன் மூலம் ரேஷன் கார்டு வைத்து இருக்கும் பயனாளர்கள் இந்திய நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர் அவருக்கான ரேஷன் விநியோக பொருட்களை பெற்று கொள்ளலாம் என்றும் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் எல்லா ரேஷன் கடைகளிலும் பொருத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்திய நாட்டில் தோராயமாக சுமார் 1.96 கோடி ரேஷன் கார்டுகள் இருப்பதால் முழு நேரம் ரேஷன் கடை மற்றும் பகுதி நேர ரேஷன் கடை என பிரித்து மொத்தமாக 33,702 ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதுபோல மக்கள் இதுநாள் வரையிலும் ரேஷன் கடைக்கு சென்று தான் பொருட்களை பெற்று வருகின்றனர். ஆனால் இனி ரேஷன் கார்டு வைத்து இருக்கும் பயனாளரின் வீட்டிற்கு சென்று மொபைல் ரேஷன் கடை திட்டத்தை ஒரே நாடு ஒரே ரேஷன் கடை என்பதன் கீழ் 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் அமலுக்கு வருவதற்கான பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் போய் சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபற்றிய முழு அறிவிப்பானது விரைவில் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |