முக்கிய அறிவிப்பு.. பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி இதுவே.. இணைக்காவிட்டால் பான் கார்டு பிளாக் செய்யப்படும்

Advertisement

பான் கார்டு முக்கிய அறிவிப்பு வெளியீடு | Pan Card Aadhar Card Link Last Date in Tamil

Pan Card Aadhar Card Link Last Date in Tamil – வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்க இருப்பது.. ஒரு முக்கிய அறிவிப்பை பற்றி தான் உங்களிடம் பான் கார்டு உள்ளது என்றால் உடனே ஆதார் எண்ணுடன் லிங்க் செய்துவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் பான் கார்ட் பிளாக் செய்யப்படும்.. பல வருடங்களாக மத்திய அரசின் வருமான வரித்துறை பான் கார்டுடன் ஆதார் எண்ணெய் லிங்க் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறது.

ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைக்கவேண்டும் என்பது தற்பொழுது அவசியமாகிவிட்டது. அதாவது முக்கியமாக வங்கி கணக்கு, செல்போன் இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்பொழுது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்றும் மின்சார வாரியமும் அறிவித்துள்ளது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்பு 31 ஏப்ரல் 2022 தான் பான் கார்டு, ஆதார் இணைப்புக்கான கடைசி தேதியாக இருந்தது. இருந்தாலும் இன்னும் பலர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை லிங்க் செய்யாத காரணத்தினால் மீண்டும் லிங்க் செய்ய கடைசி தேதியை அறிவித்துள்ளது.. இது தான் லிங்க் செய்வதற்க்கான கடைசி கால அவகாசம் ஆகும்.. அதன்பிறகும் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அவர்களுடைய பான் கார்ட் பிளாக் செய்யப்படும் என்று வருமானவரி துறை அறிவித்துள்ளது.. சரி இப்பொழுது இதற்கான கடைசி தேதி எப்பொழுது என்று பார்க்கலாம் வாங்க.

பான் கார்டுடன் ஆதார் கார்டை ஒரு நிமிடத்தில் இணைத்துவிடலாம் 

பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி: Pan Card Aadhar Card Link Last Date in Tamil

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கடைசி தேதி 31.03.2023 தான் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு யாராலும் பான் கார்டை லிங்க் செய்ய முடியாது என்றும், அதன் பிறகு லிங்க் பண்ணாத பான் கார்ட் பிளாக் செய்யப்படும் என்றும் வருமானவரித்துறை அதிகாரபூர்வகம் அறிவித்துள்ளது. பான் கார்ட் மற்றும் ஆதார் எண் இரண்டியும் இணைக்க வேண்டும் என்று அரசு பல வருடங்களாக அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வருமானவரி துறை செயலிழப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement