பட்டா சிட்டா என்றால் என்ன.?
பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் தமிழ்நாடு நிலம் தொடர்பான பதிவேடுகளில் பட்டா சிட்டா என்ற ஒரே ஆவணமாக இணைக்கப்பட்டது.
பட்டாவை ஆன்லைன் மூலமாக மாற்றி கொள்ளலாம்:
பட்டா சிட்டா நிலப்பதிவேடை பொதுமக்களுக்காக தமிழநாடு அரசு தொடங்கியது. பட்டா மாறுதலுக்கு பல்வேறு இடையூர்கள் ஏற்பட்டிருந்ததால் தமிழக அரசு ஆன்லைன் மூலமாகவே பட்டாவை மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.
LPG கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் இவர்களுக்கு மட்டும் தான்..
இனி ஆன்லைன் வழியாக பட்டாவை மாற்றி கொள்ளலாம். அதற்கான வலைத்தளத்தையும் வெளியுட்டுள்ளார்கள். அந்த வலைதளத்திற்கு சென்று அதில் தேவையான ஆவணங்கள் போன்றவற்றை உள்ளிட வேண்டும். மேலும் இதற்கு ஆன்லைன் வழியாகவே அதற்கான தொகையும் செலுத்தி கொள்ளலாம்.
பட்டா மாறுதலுக்கு அப்ளை செய்து விட்டு அது மாறிவிட்டதா என்பதை அறிந்து கொள்வதற்கும் வலைத்தளத்தை வெளியிட்டுள்ளது. அதில் பட்டா எண்ணை மட்டும் உள்ளிட்டு சரி பார்த்து கொள்ளலாம். நீங்கள் இதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு பட்டா நம்பரை போட்டு பட்டா சரியாக உள்ளதா என்று சரி பார்த்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தின் நிலையை அறிய வலைத்தளம்:
https://eservices.tn.gov.in/eservices
பட்டா சிட்டா செக் செய்வதற்கு வலைத்தளம்:
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |