இனி ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்..!

Advertisement

Payment Can Be Made Online At All Ration Shops in Tamil Nadu

மாதம் மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது வழக்கம். அப்படி நாம் வாங்கும் பொருட்கள் கடைகளில் விற்கும் விலையை விட சற்று குறைவாக இருக்கும். இப்படி இருக்கும்பட்சத்தில் பலதரப்பட்ட மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக ரேஷன் கடைகளில் பல மாற்றங்கள் செய்து உள்ளது.  எனவே தற்போது புதிய மாற்றம் அடைந்துள்ளது. அது என்னவென்றால் இனி ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம். இந்த செய்திகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Payment Can Be Made Online At All Ration Shops in Tamil Nadu:

கூட்டுறவுத் துறை பதிவாளர் சங்கர் அனுப்பி இருக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கையில் மே மாதம் முதல் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிப்பு இருந்தது.

அதேபோல்  தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக் கடைகளிலும் (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர், இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News 👉👉  Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது.. 

இந்த செயல்பாடுகள் அதாவது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒரு வாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும்.  அதேபோல் அனைத்து ரேஷன் கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்து இருந்தார்.

புதிய அறிவிப்பு  ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுக்கவில்லையா இனி பயப்பட வேண்டாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement