ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு
இப்போது அதிவேகமாக பரவி கொண்டிருக்கும் ஒரு செய்தி என்றால் அது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பு பற்றி தான். நாம் பான் கார்டு வைத்து இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அதனை ஆதார் கார்டுடன் இணைப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் இந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பலரும் அதற்கான முயற்சியை மிக வேகமாக எடுத்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இப்போது உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அது என்னவென்றால் பான் மற்றும் ஆதார் கார்டினை சில நபர்கள் இணைக்க வேண்டாம் என்று அரசு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆகாயல் யார் யார் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டாம் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு அந்த குட் நியூஸை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த நியூஸ் தெரியுமா..? தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க..!
ஆதார் பான் கார்டு இணைப்பு:
இன்றைய நாளை பொறுத்தவரை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மற்றும் பான் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் திடீரென மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அனைத்து நபர்களும் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக சில விதிமுறைகள் உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
அதாவது வருமான வரி சட்டம் 1961-ன் படி குடியுரிமை பெறாத எந்த ஒரு நபர்களும் ஆதார் மற்றும் பான் இணைக்க தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதுபோல 80 அல்லது அதற்கு மேல் வயது உள்ளவர்கள் ஒருவேளை பான் கார்டு வைத்து இருந்தால் அவர்களும் இணைக்க தேவையில்லை என்றும் மற்றும் இந்திய குடிமகனாக இல்லாத நபர்களும் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |