PM KISAN: 13-வது தவணையை ஆன்லைன் மூலம் அறிய எளிய வழி இதோ..!

Advertisement

PM KISAN: 13-வது தவணையை ஆன்லைன் மூலம் அறிய எளிய வழி இதோ..! PM Kisan 13th Installment Date Tamil..!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2019-ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12-வது தவணைத் தொகையைக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகை பிப்ரவரி 24-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. ஆக 13-வது தவணையை ஆன்லைன் மூலம் அறிவதற்கான எளிய வழி மற்றும் யாருக்கெல்லாம் இந்த 13-வது தவணை கிடைக்காது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

13-வது தவணை யாருக்கெல்லாம் கிடைக்காது:

இதுவரை தங்களது நில ஆவணம் சார்ந்த தகவல்களையும், இ-கேஒய்சி (E-kyc) தகவல்களையும் பதிவு செய்யாத விவசாயிகள் இந்த 13-வது தவணையைப் பெற இயலாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 75 லட்சம் வரை மானியம்..!

கிசான் 13 – வது தவணை தொகை வரவு – ஆன்லைன் மூலம் அறியும் வழிமுறைகள் – PM Kisan 13th Installment Date Tamil:

முதலில் உங்களுடைய கணக்கில் பணம்வந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை சில காரணங்களுக்காக பணம் வராமல் போகலாம்.

அதுகுறித்த நிலவரத்தை பிஎம் கிசான் இணையதளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

அதற்கு முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்குள் (https://pmkisan.gov.in/) செல்லவும்.

அதன் பிறகு, பயனாளியின் நிலையை (Beneficiary Status) கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடையப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்கவும்

இறுதியாக உங்களின் கிசான் திட்டத்தின் நிலை திரையில் தோன்றும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை இல்லை.! உயர்கல்வித்துறை அரசு வெளியிட்டுள்ளது..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement