PM கிசான் திட்டத்தில் 8000 பெற விவசாயிகள் இதை செய்தால் போதும்!!! PM Kisan Scheme Latest News
PM Kisan Scheme Latest News : 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் தான் இந்த பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2,000/– வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்தில் 13-வது தவணைத் தொகையை ஜனவரி இறுதியில் விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பயனர்கள் PM கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இத்தவணைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. ஆக வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியாது. எனவே விவசாயிகள் ஆதார் எண்ணை எப்படி உறுதி செய்யலாம்? என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின் மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் பெறும் திட்டம்..! எப்படி பெறலாம்..!
விவசாயிகள் ஆதார் எண்ணை எப்படி உறுதி செய்வது?
PM கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யாத பயனாளிகள் இரண்டு முறைகளில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். அது எப்படி என்று பின் வருவனவற்றுள் பார்க்கலாம் வாங்க.
அதாவது உங்கள் ஊரில் அருகில் இருக்கும் e பொது சேவை மையத்திற்குச் சென்று, உங்கள் கைரேகையை பதிவு செய்து உங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
அல்லது வீட்டில் இருந்தபடியே பி.எம்.கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க எண்ணை (OTP) உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
மேலும் சில தகவல்கள்:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று தங்களது வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இது குறித்த சந்தேகங்களுக்கு உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம்.
இந்த திட்டத்தில் இது வரை 6000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 8000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |