இந்த App மூலம் நேரடியாக பிரதமர் மோடியிடம் நாம் பேசலாமா!

Advertisement

Jan Man Survey on the NaMo App!

திங்களன்று, NaMo செயலியில் ஜன் மேன் கணக்கெடுப்பு மூலம் இந்தியாவின் வளர்ச்சி குறித்த உள்ளீடுகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றும் இன்னும் பலவிதமான கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகத் தெரிவிக்க #JanManSurvey ஐப் பயன்படுத்துமாறு கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமான ‘NaMo‘ செயலி, லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, மக்கள் தங்கள் உள்ளூர் எம்பி மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய கருத்துகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைக் கண்டறியும் வாக்கெடுப்பை செவ்வாயன்று தொடங்கியது. ‘ஜன் மேன் சர்வே‘யின் நோக்கம், தலைமை மற்றும் ஆளுகை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பொதுமக்களின் கருத்தை சேகரிப்பதாகும். இதன் மூலம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எளிதில் அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

NaMo ஆப் என்றால் என்ன | NaMo App in Tamil 

பிரதமர் நரேந்திர மோடியின் செயலி, பெரும்பாலும் “NaMo ஆப்” என்று அழைக்கப்படுகிறது, இது “பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் அடிமட்ட பணியாளர்களால் இயக்கப்பட்டு வருகிறது”. பாரதிய ஜனதா கட்சியின் ஐடி செல்லின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா, இந்த செயலியின் தலைமை இணக்க அதிகாரி, குடியுரிமை குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் முக்கிய தொடர்பு நபர் ஆவார். இந்த NaMo ஆப் narendramodi.in என்ற இணையதளத்தில் உள்ள ஒரு பகுதியாகும்.

இனிமேல் ஒரே ஒரு Train Ticket இருந்த போதும் நீங்க 56 நாட்கள் வரை Train-ல பயணிக்கலாம்

ஜன் மேன் சர்வே என்றால் என்ன?

இந்த ஜன்மன் கணக்கெடுப்பில் நீங்கள் கலந்துகொள்ள முதலில் NaMo செயலி டவுன்லோட் செய்யவும் அதற்கான வழிகள் கீழே உள்ளது.

  • நீங்கள் NaMo செயலி-ஐ Apple App Store அல்லது Google Play Store இலிருந்து NaMo பயன்பாட்டைப் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
  • அல்லது இந்த #JanManSurvey link-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
  • பிறகு ‘சர்வேயைத் தொடங்கு/ Start Survey‘ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் பதில்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் வழங்கவும்.

ஜன் மேன் சர்வே கேட்கப்பட்ட கேள்விகள்

  • PM Modi அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?
  • கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, ​​எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
  • இந்தியாவின் உலகளாவிய முக்கியத்துவம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • உங்கள் மாவட்டத்தில் எந்த மூன்று பாஜக அரசியல்வாதிகள் அதிகம் உங்களால்  விரும்பப்படுகிறார்கள்?

இன்னும் நிறைய கேள்விகளுக்கான பதில்களை NaMo செயலி மூலம் ஜன்மன் கணக்கெடுப்பில் நீங்கள் சமர்ப்பிக்கலாம். 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link
Advertisement