Pollachi Jio 5g Launch
நம் அனைவரின் கையிலும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. அதனை பயன்படுத்த நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். முன்பு 1 GP என்று இருந்த காலம் போய் இன்று 4g முடிந்து 5g தொடங்கியுள்ளது. இந்த தொடக்கமானது நாடு முழுவதும் தொடக்கப்படுவதாக உள்ளது. அதனை தொடர்ந்து Jio நிறுவனம் சிறிய சிறிய நகரங்களில் துவங்கியுள்ளது. அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
Pollachi Jio 5g Launch:
தமிழத்தில் Jio 5g எங்கு கிடைக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்..! தமிழ்நாட்டில் 8 நகரங்களில் 5G சேவை தொடக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன ஊர்கள் என்று பார்ப்போம். கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களில் Jio 5g சேவையை பெற முடியும்.
தற்போது மேலும் இரண்டு நகரங்களில் 5g சேவை அறிமுகம் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகியவற்றில் துவங்கியுள்ளது.Jio இதுவரை நம் நாட்டில் மொத்தம் 304 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.
இந்த வருடம் அதாவது 2023 ஆண்டின் இறுதிக்குள் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் 5g சேவை முழுவதுமாக இருக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Airtel நிறுவனம் மேலும் 125 நகரங்களில் 5G சேவை துவங்கியுள்ளது..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |