வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டிசம்பர் 30 முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்..!

Updated On: December 29, 2022 1:11 PM
Follow Us:
Pongal Gift 2023 Tamil Nadu
---Advertisement---
Advertisement

பொங்கல் தொகுப்பு 2023

பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதற்க்கான டோக்கன் டிசம்பர் 30 முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு விநியோகம் செய்வது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அது குறித்த தகவலை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

Pongal Gift 2023 Tamil Nadu –  பொங்கல் பரிசு 2023:Pongal Gift 2023

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநர் அலுவகத்தில் நடைபெற்றக் கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி பொங்கல் பண்டிகைக்கு அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகம் செய்வதற்க்கான டோக்கன்கள் டிசம்பர் 30-ஆம் தேதியில் இருந்து பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர். டிசம்பர் 30 தொடங்கி ஜனவரி 4-ஆம் தேதி வரை பயனாளர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும்.

இந்த டோக்கன் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்படும் என்றும், அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.

மேலும் நியாய விலைக் கடைகளுக்கு மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், ரேஷன் கடைக்கு நேரில் வரமுடியாதவர்கள், கைரேகை வைக்க முடியாதவர்கள் தங்களுக்கு மாற்றாக யார் செல்கிறார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் மட்டும் அந்த நபரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.

மேலும் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் இந்த பொங்கல் தொகுப்பு நேரடியாகத்தான் தங்களுக்கு வழங்கப்படும் என்றும், வங்கி கணக்குகளில் வழங்கப்படாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now