2024 பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் டோக்கன் தேதி!

Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு 2024

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கமாகவுள்ளது. அதே போல் இந்த ஆண்டும் மக்கள் பலர் பொங்கல் பரிசுதொகுபிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் நமக்கு எல்லாம் இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து வரும் பொருட்கள்மீது ஆர்வம் அதிகம். வரும் இந்த பொங்கலுக்கு, பரிசு தொகுப்புடன் பானை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியானது. 

அரிசி, வெல்லம், மற்றும் ரூ.1000 போன்ற பொருட்கள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, இந்த ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது இடத்திலும் உள்ளது. இது குறித்து, நிர்வாகம் ஆலோசனை நடத்திவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு LIC-ன் சிறப்பு சலுகை

பொங்கல் பரிசு 2024 | Pongal Gift 2024

Pongal Gift 2024

வீட்டுவசதி துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்கள் செய்தியாளர்களின் சந்திப்பின் பொழுது அவர் கூறியதாவது பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுமா அல்லது ரேஷன் கார்டுதாரர்களுக்கு Rs.2000 வழங்கப்படுமா என்ற ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் விரைவில் அதற்கான முடிவுகள் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதில் மக்களுக்கு சில சந்தேங்கள் எழுந்துள்ளது, அது என்னவென்றால் பொங்கல் பரிசுதொகுப்பு அல்லது ரொக்கம் வழங்கப்படுவதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா இல்லையா என்ற சந்தேகம் தான். இவை அனைத்திற்கும் தமிழக அரசு விரைவில் பதிலளிக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ பொங்கல் பண்டிகை வரலாறு

பொங்கல் பரிசுதொகுப்பு டோக்கன் தேதி 2024

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், 2024 ஜனவரி இரண்டாவது வாரத்தில் (ஜனவரி 8-13 வரை) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொருமாதமும் 15-ஆம் தேதி இவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுது பொங்கல் அதே தேதியில் வருவதால் மகளிர் உரிமை தொகை முன்னதாக வர வாய்ப்புள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement