பொங்கல் பரிசு தொகுப்பு
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் 2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு என்ன வென்று தெரிந்து கொள்வோம். இந்துக்கள் பண்டிகைகளில் பொங்கல் முக்கியமான பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகைகளில் ஒவ்வொரு வருடமும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசுகள் தமிழக அரசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற பொங்கலுக்கு என்ன பரிசு அரசு வழங்க உள்ளது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
பொங்கல் பரிசு தொகுப்பு 2022:
2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசி பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம், மல்லி தூள் – 100 கிராம், கடுகு – 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு – 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1 கிலோ, கோதுமை – 1 கிலோ, உப்பு – 500 கிராம், துணி பை, கரும்பு போன்ற 21 பொருட்களை தமிழக அரசு வழங்கியது.
ஆனால் இப்படி வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைந்து இருந்தது என தகவல் வெளியாகி புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது .
இதையும் படியுங்கள் ⇒ பொங்கல் பண்டிகை வரலாறு
பொங்கல் பரிசு 2023:
கடந்த வருடம் போல வரும் 2023-ஆம் ஆண்டு பொங்கல் பரிசு பொருள்கள் இல்லாமல் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1000 ரூபாய் பணமாக வழங்கலாம் என்று முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |