வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2026 பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்க கோரி அறிவிப்பு…! எப்போது ரேஷனில் வழங்கப்படும்?

Updated On: December 22, 2025 12:58 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tamil Nadu Government Pongal Parisu 2026

இன்றைய பதிவில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி பார்க்கபோகிறோம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பரிசினை வருடம் தோறும் வழங்கி வருகின்றன. கடந்த வருடம் வாங்கப்பட்ட ஒரு சில பொங்கல் பரிசு பொருட்கள் தரம் குறைந்த பொருளாகவும் மற்றும் வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை வைத்தனர். ஆக இதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகையானது ஜனவரி 07 முதல் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலத்தில் இந்த காலகட்டத்தில் ஜனவரி 09 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகை:

2026 இல் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 ரொக்க பரிசாக வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது  ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாநிலத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு இந்த முடிவு மறுசீலினை செய்யப்பட்டுள்ளது. ரூ. 5000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்பட கூடும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ.3000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதி சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள். விவசாயத்திற்கும், மனித குலத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றன.

மகளிர் உரிமை தொகை உங்களுக்கு வரலையா அப்போ என்ன செய்யணும் தெரியுமா?

பொங்கல் பண்டிகை பரிசு:

முதன் முதலில் பொங்கல் பரிசாக ரூ. 5000 வழங்க தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் படி ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரகளுக்கும் இந்த பரிசு நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியானது. 

இருப்பினும் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல நலத்திட்டங்கள். மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்குக்கான ஒதுக்கீடு,மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் போன்ற காரணங்களால் நிதி சவால்கள் அதிகரித்தன. இதன் விளைவாக ரூ.5000 பதிலாக ரூ.3000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now