Post Office Savings Account Aadhar Card Link in Tamilnadu
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் சில விஷயங்களை மறக்காமல் நாள் தோறும் செய்து வரும் பழக்கம் என்பது இருக்கும். அப்படி பார்த்தால் அன்றாடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளையும் செய்திகளாக தெரிந்து வைத்து இருப்பது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவ்வாறு நாம் அன்றாடம் செய்திகளை தெரிந்துக்கொள்வதன் மூலம் நமக்கு தேவையான முக்கியமான செய்திகளும் நமக்கு தெரிய வரும். இதன் படி பார்க்கும் போது நாம் முக்கியமான செய்திகளாக கருதுவது என்பது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு என வங்கி அல்லது பணம் ரீதியான அறிவிப்புகள் ஆகும். அதன் படி பார்த்தால் தபால் துறையில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு என்று புதிய அறிவிப்பு என்று வந்து உள்ளது. ஆகையால் அது என்ன என்று அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் நிலையம் சேமிப்பு கணக்கு:
நாம் அனைவரும் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அத்தகைய சேமிப்பினை தபால் நிலையங்களில் தொடங்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம்.
ஏனென்றால் மற்ற வங்கி மற்றும் நிதிநிறுவங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் அதிகப்படியான வட்டி மற்றும் பாதுகாப்பு தன்மை என்பது அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் தபால் துறையில் மக்கள் சேமிப்பதற்கு என்றே 9 வகையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
இறங்கி செய்யுறதுனா இதனா.. புதிய ரீச்சார்ஜ் பிளானில் தினமும் 2 GB டேட்டா வழங்கும் BSNL
இத்தகைய 9 வகையான திட்டங்களும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறை, சேமிப்பு தொகை, வட்டி விகிதம் மற்றும் முதிர்வு காலத்தினை கொண்டுள்ளது. ஆகவே மக்கள் இந்த திட்டங்களில் எது ஏற்றகாக இருக்கிறது என்று பார்த்து அதில் சேமித்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் தபால் துறையில் கணக்கு வைத்து சேமித்து இருப்பவர்களுக்கு என்று ஒரு புதிய விதிமுறை அல்லது நியூஸ் ஆனது வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC), PPF, SCSS மற்றும் போஸ்ட் ஆபீசில் உள்ள இதர சேமிப்பு திட்டங்களில் உங்களுக்கு கணக்கு இருக்கிறது என்றால் உங்களுடைய கணக்குடன் ஆதார் எண்ணை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஆகவே அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வங்கிக் கிளையிலோ ஆதார் எண்ணை சமர்ப்பித்துள்ளீர்கள் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இதனை செய்யவில்லை என்றால் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் உங்களின் கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |