PPF Withdrawal Rules in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதித்து வருகிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் பணம் தான். பணம் இருந்தால் தான் இந்த உலகில் நம்மால் வாழமுடியும். அதுபோல நம்மால் ஒரு வயது வரை தான் சம்பாதிக்க முடியும். அதற்கு பிறகு நாம் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று யோசிப்பீர்கள். அதற்கு தான் பல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அப்படி நாம் சம்பாதிக்கும் காலத்தில் சேமிக்க தொடங்கினால் தான் ஓய்வு காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும். அதுபோல இருக்கும் சேமிப்பு திட்டங்களில் PPF சேமிப்பு திட்டமும் ஓன்று. இந்த PPF திட்டத்தில் வந்திருக்கும் புதிய விதி என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
PPF கணக்கிலிருந்து பணம் எடுக்க புதிய விதி..!
இன்றைய நிலையில் பலரும் போஸ்ட் ஆபிஸ் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருக்கிறார்கள். PPF என்பது Public Provident Fund என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இது பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆகும். இது நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
அதுபோல இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும். அதனால் பலரும் இந்த PPF திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை இடையில் எடுக்க முடியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த திட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் முதலீட்டாளர் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு பணத்தேவை ஏற்படும் பட்சத்தில் PPF கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அதுபோல குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு கூட PPF சேமிப்பு கணக்கிலிருந்து முதலீட்டாளர் முழுப் பணத்தையும் எடுத்து கொள்ள முடியும்.மேலும் PPF கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டு இந்தியராக மாறினாலும் அவர் தனது பொது வருங்கால கணக்கை மூடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்👇
சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..
மேலும் இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. PPF திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் எவராக இருந்தாலும், அவர் கணக்கை தொடங்கி 5 வருடங்கள் முடிந்த பிறகு தான் அந்த PPF கணக்கை மூட முடியும். அதேபோல கணக்கை முதிர்வு காலத்திற்கு முன் முதலீட்டாளர் மூடினால், கணக்கைத் திறந்த தேதியிலிருந்து மூடும் தேதி வரை அவர்களுக்கு 1% வரை வட்டி கழிக்கப்படும்.
இதையும் படியுங்கள்👇
பெண் ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு.. துணை ஆளுநர் அறிவிப்பு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |