ரயிலில் நாய்களுக்கும் முன்பதிவு செய்யலாம்..!

Advertisement

Pre-Registration For Pets On Trains in Tamil

பஸ், கார், பைக் என அனைத்தையும் விட ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் ரயில் பயணத்தில் மற்ற பயணங்களில் இல்லாத வசதிகள் இருக்கும். ஆகவே அனைவரும் ரயில் பயணத்தை மிகவும் விரும்புகின்றனர்.  அதேபோல் ஒவ்வொரு நாளும் ரயில் பயணத்தில் மக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் ரயில் பயணங்களில் நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அம்சங்களில் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார்கள். ஆகவே அதனை தொடர்ந்து இந்த பதிவின் வாயிலாக ரயில்வே தற்போது என்ன மாற்றம் கொண்டுவர உள்ளது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pre-Registration For Pets On Trains in Tamil:

சென்னையில் ரயில் பயணத்தில் செல்ல பிராணிகளை அழைத்து செல்ல ஐ.ஆர்.சி.டி.சி -யில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. ஆகவே அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

ரயில் பயணத்தில் 82 சதவீதம் பயணிகள் உள்ளனர். அதேபோல் இதில் அனைத்திற்கும் முன் பதிவுகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் படுக்கை அறை கூட முன்பதிவு செய்ய உள்ளார்கள். அதேபோல் தற்போது பஸ் டிக்கெட் கூட முன்பதிவு செய்கிறோம்.

இனி ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்

அதேபோல் நாய், பூனை, பறவை போன்ற செல்லப் பிராணிகளை அழைத்து செல்ல மிகவும் வசதியாக உள்ளது. ஆனால் அதற்கு என்று முன்பதிவு இல்லை. அதேபோல் ஆன்லைனில் அதற்கான முன்பதிவு இல்லை என்பதால் மக்கள் அனைவரும் அதற்கு கோரிக்கை வைக்கிறார்கள். ஆகவே ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவு வசதியை கொண்டவர முடிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனை பற்றி ரயில்வே அதிகாரிகளால் பேசியதாவது இந்திய ரயில்வேயில், யானைகள், குதிரைகள், கழுதைகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பிற விலங்குகள், பறவைகள் ரயில்களில் அழைத்து செல்லலாம். ஆனால் மற்ற விலங்குகளை விட வீட்டில் வளர்க்கும் நாய்களை அழைத்து செல்ல விரும்புகின்றனர். இருப்பினும், சில கட்டுப்பாடுகள் உள்ளன.

செல்ல நாய்களை முதல் ‘ஏசி’ வகுப்பிலும், ரயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ், லக்கேஜ் மற்றும் பிரேக் வேனிலும் ஏற்றிச் செல்ல பதிவு செய்யலாம். பயணிகள் நாய்களை கூடவே அழைத்து செல்ல கூடாது. நாய்க்கு என்று தனியாக கூபேயில் தங்குமிடத்தை பிரத்யேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு முன்பதிவு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதனை 2 மாதத்தில் அறிவிக்கும். முன்பதிவு திட்டங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் ஒன்று, மாநிலங்கள் இரண்டு  இந்த வினோதமான ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement