QR Code Facility In All Houses in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியை கூறப்போகிறேன். அதற்கு முன் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று கேட்பீர்கள். இன்று தான் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறதே. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போன் வந்ததற்கு பின் நம் பாதி வேலைகள் சுலபமானதாக மாறிவிட்டது.
முன்பெல்லாம் யாருக்காவது பணம் அனுப்புவதாக இருந்தால் வங்கிக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றோம். இன்னும் சொல்லப்போனால் கடையில் ஏதும் பொருள் வாங்கினால் கூட அதற்கு கையில் பணம் கொடுக்காமல் QR Code மூலம் பணத்தை அனுப்புகிறோம். அதுபோல இனி அனைத்து வீடுகளிலும் QR Code வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதை பற்றி தெளிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இனி அனைத்து வீடுகளிலும் QR Code வசதி..!
மக்களின் தனிப்பட்ட சேவைகளான பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட சான்று பெறவும், கட்டட அனுமதி கேட்டு பலரும், தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் உரிய முறையில் இதற்கு பதில் அளிக்காமல் அலட்சியம் செய்கின்றனர்.
ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த புதிய திட்டங்கள் இதை கூட தெரிஞ்சிக்கலனா எப்படி |
இதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையிலும் QR Code என்ற திட்டத்தை, தாம்பரம் மாநகராட்சி அமல்படுத்தி உள்ளது.
இதுபோல அனைத்து வீடுகளிலும் QR Code வசதி வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 48 -வது வார்டில் சோதனை முயற்சியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வார்டில் உள்ள 2,976 குடியிருப்புகளில், 1,500 குடியிருப்புகளுக்கு ‘QR Code’ குறியீடு அட்டை ஒட்டப்பட்டு வருகிறது.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா |
மேலும் இதை பயன்படுத்த தனித்துவமான கருவிகள் எதுவும் தேவைப்படாது என்றும், இணையம், கேமரா வசதியுடைய மொபைல் போன் இருந்தாலே போதுமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த அட்டையை, ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் தங்களுடைய மொபைல் போன் எண்ணுடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மொபைல் போனில் ‘ஸ்கேன்’ செய்து, சொத்து வரி, குடிநீர் இணைப்பு விபரம் மற்றும் கட்டணம், கட்டட அனுமதி, மாநகராட்சியின் அறிவிப்புகள், காலி மனை வரி, திடக்கழிவு மேலாண்மை வரி விதிப்பு, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம் என்று தாம்பரம் மாநகராட்சியில் கூறப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளரே இன்னுமா நீங்க இந்த குட் நியூஸை தெரிஞ்சிக்கல |
என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |